பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. பொருகளத் தலகை வகுப்பு 385 12. குதட்டி) வாயிலிட்டு மென்று, (நெடியன உதட்டில்) நீண்டு தொங்கும் தமது உதட்டில், (இடுதசை) இட்ட மாமிசத்தைக் (கொடிக்கும்) காக்கைக்கும் (முதுசின நரிக்கும்) பழையதும் கோபங்கொண்டுள்ளதுமான நரிக்கும் (உண்ணும். படி தமது வாயினின்றும் வெளியே) உமிழ்ந்து தள்ளுவன (பொருகளத்தலகைகள்) 13. குணக்கு) கிழக்கு, கிழக்கில் உள்ள வளைகடல், குடாக்கடல், வடக்கு (இயமதிசை) தெற்கு (குடக்கு) மேற்கு (முழுவதும்) ஆக, நாற்றிசை முழுவதும் (அடக்கும் வயிறின) அடக்கவல்ல வயிற்றைக் கொண்டன (பொருகளத்தலகைகள்) 14. குரக்கு குரக்குவாதம் பிடித்த காரணத்தால் வளைந்திருந்த (மிடறின) கழுத்தை உடையன (கரத்தில்) கையில் ஏ களையும் குலுக்கி அடியோடு அவைகளைப் பறித் அது நி ர்ந் தெழுவன (பொருகளத்தலகைகள்) து. இரத்த நதியிடை குதித்தும் முழுகியும் குடித்தும் ரத்த ஆற்றிலே குதித்தும், முழுகியும், ரத்தத்தைக் குடித்தும் (உணர்வொடு) தெளிந்த அறிவுடன் (களித்து மகிழ்வுற்று வருவன பொருகளத்தலகைகள்) 16. குறத்தி) வள்ளியின் (இறைவனை) நாயகனது (நிறைத்து மலரடி குறித்து அடி குறித்து மலர் நிறைத்து) திருவடியைத் தியானித்து மலர்கள் நிரம்ப இட்டு (வழிபடும்) பூசித்து வணங்கும் குணத்தை உடையன (பொருகளத் தலகைகள்) 17. (துதிக்கையையுடைய மலைகளை) (இறந்துபட்ட) யானைகளை (ஒன்றன்மேல் ஒன்றாக) அடுக்கி, (அலகைகள்) பேய்கள் (துதிக்க) போற்றிசெய்ய, (அவைமிசை) அங்கனம் அடுக்கப்பட்ட ஆசனத்தின்மேல் (இருக்கும் அரசின) அரசு வீற்றிருப்பன (பொருகளத்தலகைகள்) 18. துளக்கம் உறு - அசைதலை உற்ற (சுடர் விளக்கை) ஒளி விளக்கை (அனையன) நிகர்ப்பன; சுழிசுழித்து (வெருவர) அச்சம் ஊட்டும் வகையில் விழித்த (விழிகளை) கண்களைக் கொண்டன (பொருகளத்தலகைகள்).