பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 முருகவேள் திருமுறை 19 திருமுறை 12. வேடிச்சி காவலன் வகுப்பு (இது வேடர் மகளாம் வள்ளி காதலராகிய முருகன் பெருமையைக் கூறும்.) தனதனண தத்ததன தனதனண தத்ததன தனதனன ததததன தானதத தானதன 1உதரகம லத்தினிடை முதியபுவ னத்ரயமும் உகமுடிவில் வைக்கும்உமை யாள்பெற்ற பாலகனும் உமிழ்திரை பரப்பிவரு வெகுமுக குலப்பழைய உதகமகள் பக்கல்வரு சோதிச் சடானனனும் உவகையொடு. கிர்த்திகையர் அறுவரும் எடுக்கஅவர் ஒருவரொரு வர்க்கவணொர் ஒர்புத்ரன் ஆனவனும் 'உதயரவி வர்க்கநிகர் வனகிரண விர்த்தவிதம் உடையசத பத்ரநவ பீடத்து வாழ்பவனும் () தேவியின் திருவயிறு - கமலத்துக்கு ஒப்பிடப்பட்டது: "திருமுகம் கமலம் ........ வலம்புரி யுந்தி பொற் கமலம்" - தணிகைப் புராணம் - களவு 43. (ii) உலகங்கள் யுகாந்தத்தில் தேவி வயிற்றில் அடங்குவது:"பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே பின் கரந்தவளே"- அபிராமி அந் 13.

  • கங்கையில் தோன்றியதால் முருகவேள், காங்கேயன்’ ஆயினன்.
  • ஒருருவாய் இருந்த குழந்தை கார்த்திகை மாதர் அறுவரும். தாம் தாம் பால் கொடுக்க விரும்பியதை உணர்ந்து - <?!, DI குழந்தைகளாயினர்.

HH 'மறுவறும் ஆர லா மாதர்மூ விருவர் தாமும் நிறைதரு சரவ் நிமலனை யடைந்து போற்ற உறுநர்கள் தமக்கு வேண்டிற் றுதவுவோன் ஆத லாலே அறுமுக ஒருவன் வேறாய் அறுசிறார் உருவங்கொண்டான்' கந்தபுரா. திருவவதாரப்படலம் 116.