பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. வேடிச்சி காவலன் வகுப்பு 423 பொழிப்புரை 1. (உதரம்) வயிறாகிய (கமலத்தினிடை) தாமரையிடத்தே (முதிய) பழமையாய் வரும் (புவனத்ரயமும்) மூவுலகங்களையும் (உக முடிவில்) யுகாந்த காலத்தில் யுகம் முடியும் காலத்தில் (வைக்கும்) வைத்து அடக்கிக்கொள்ளும் (உமையாள்) உமாதேவி பெற்ற குழந்தையும் (வேடிச்சி காவலனே) 2. வெளி வீசும் திரைகளைப் பெருக்கி வருகின்றதும், பல முகமாகப் பரந்து ஒடுவதுமான, சிறப்பு வாய்ந்த பழைய நீர் ம்களாம் கங்கையின் (பக்கல்) இடத்தே அவதரித்தருளின சோதியும்; அல்லது ஜோதி நிறத்த (சடானனன்) ஆறு திருமுகங்களை உடையவனும் (வேடிச்சி காவலனே) 3. (உவகையொடு) மனமகிழ்ச்சியுடன் (கிர்த்திகையர் அறுவரும்) கிர்த்திகை மாதர் ஆறுபேரும் (எடுக்க) எடுக்க விரும்ப், (அவர்கள் ஆசையைப் பூர்த்தி செய்ய), அவர் ஒருவர் ஒருவர்க்கு - அவர்கள் ஒவ்வொருவருக்கும் (அவன்) அவ்விடத்தே அங்கே (ஓரோர் புத்ரனானவனும்) ஒரு ஒரு குழந்தையாய் ஆனவனும் (ஆறுபேரும் எடுத்து மகிழ ஆறு குழந்தைகளாய் ஆனவனும் (வேடிச்சி காவலனே) 4. உதயரவி வர்க்கம் - உதயமாகின்ற (ரவி வர்க்கம்) சூரியர்களின் கூட்டத்தை (நிகர்) நிகர்க்கும், (வனம்) அழகு வாய்ந்ததும், (கிரணம்) ஒளி, (விர்த்தம்) ஒன்றோடொன்று முரண்பட்ட (நிறங்களை) விதம் உடைய விதம் விதமாகக் கொண்டதுமான, (சதபத்ரம்) மயிலாகிய, நவ பீடத்து) புதுமை வாய்ந்த ஆசனத்திலே (வாழ்பவனும்) வீற்றிருப்பவனும் (வேடிச்சி காவலனே) 'மயிலின் இறகு பலவித நிறம் கொண்டது: "பலநிறமிடைந்த விழுசிறை யலர்ந்த பருமயில்" o திருப்புகழ் 164 "சித்ரகுல கலப வாசி-திருப்புகழ் 1026, ரத்னரேகை ஒக்கச் சிறக்குமாமயில்" -திருப். 298