பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. வேடிச்சி காவலன் வகுப்பு 429 15. அமலனும் - மலம் அற்றவனும், எனக்கு (அரசும்) எனக்கு இறைவனாம் தலைவனும், (அதிகுணனும்) மேலான குணம் உள்ளவனும், (நிர்க்குணனும்) குணம் அற்றவனும் (குணம் கடந்தவனும்), அகில புவனத்து நாயகனும் - சகல உலகங்களுக்கும் தலைவனும், அமரசேனைக்கு நாயகனும் - தேவசேனைகளுக்குத் தலைவனும், (அல்லது சகல அண்டங்களிலும் உள்ள தேவசேனைகளுக்குத் தலைவனானவனும்) (வேடிச்சி காவலனே) 16. அநுபவனும் - சகல நுகர்ச்சிகளுக்கும் மூல காரணனாய் இருப்பவனும், அற்புதமூர்த்தியும், (அதுகுணனும்) (சகலத்துக்கும்) தகுதியுள்ளவனும், ஏற்ப உள்ளவனும், (அகூடிரனும்) எழுத்துக்களுக்கு மூலப்பொருளானவனும் - பிரணவ மூர்த்தியும் (அருமனம் ஒழிக்கும்) அருமைவாய்ந்த மனத்தை அழிக்கவல்ல - மனத்தை ஒடுக்கவல்ல - மனோலயம் தரவல்ல (அநுபூதிச் சுகோத்யனும்) அநுபவ ஞான சுகத்திற் கிடைப்பவனும், சுகதோற்றத்தில் விளங்குபவனும் (வேடிச்சி காவலனே) 17. (இதம் அகிதம் விட்டு) இன்ப துன்பங்களை ஒழித்து விலக்கி, (உருகி) இறைவன் திருவருளை நினைந்து உருகி, *(இரவு பகல் அற்ற இடம்) கேவல சகலங்கள் ಕ್ಲಿಫಿ: - இன்பவெளியை. (எனது அற) மமகாரம் நீங்க (இருக்கை) நிலையிடமாக (புரி) எனக்கு அருளின (யோகப் புராதனன்) சிவயோக முன்னவனும் (வேடிச்சி காவலனே)

  • இரவு பகலற *際 எனத் திருப்புகழ் பாடின காலத்துக்கும் (1007), ராப்பகல் ற்ற த்தே இருக்கை எளிதில்ல்வே, இராப்பகல் அற்ற ங்காட்டி... தண்டையந் தாளருளாய் எனக் கந்தரலங்காரத்தில் (74, 103) முறையிட்ட்' கால்த்துக்கும் பிற்ப்ட்டது. இந்த வேடிச்சி காவலன் வகுப்புப் பர்டின் காலம்; ஏனெனில் இராப்பகலற்ற இடம் வ்ேண்டுமென வேண்டின காலம் திருப்புகழ், கந்தரலங்காரம் பாடப்பட்ட காலம்; காரியம் சித்தி ப்ெற்றபின் (இராப்பகலற்ற ம் இருக்கையாக இறைவன் அருளின் பின்) ப்ாடினது இத் திருவகுப்பு.