பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438 முருகவேள் திருமுறை 19:திருமுறை 13. சேவகன் வகுப்பு தனதன தண்ன தனதன தனன தனதன தனன தனத்தா தனனா இருபிறை எயிறு நிலவெழ உடலம் இருள்படு சொருபம் உடைக்கோ விடவே 'இறுகிய கயிறு படவினை முடுகி எமபடர் பிடரி பிடித்தே கொடுபோய்; அருமறை முறையின் முறை முறை கருதி அதரிடை வெருவ ஒறுத்தால் வகையால் அறிவொடு மதுர மொழியது குழறி அலமரு பொழுதில் அழைத்தால் வருவாய், 'யமன் - பிறை எயிறு - "திங்கட் பகவின் ஒளிர் வெளிறெயிறு" திருப் புகழ் 17, இருள் சொரூபம் - சண்டக் கருநமன்- திருப்புகழ் 585. திருவகுப்பு அருணகிரியார் கிளியான பின்பு - உயர்ந்த ஞான நிலையிற் பாடினது; ஆதலால் திருப்புகழ் ஆதிய பிற நூல்களில் உள்ள யம பயத்தை நீக்கி யருளுக, பெண்கள் மீதுள்ள மயக்கு அற அருள்' என்பனபோன்ற வேண்டு. கோள்கள் திருவகுப்பிற் கிடையாது. இந்தத் திருவகுப்பு ஒன்றில் தான் யமபயம் கூறப்பட்டுளது. ஒரு ஒலைப் புத்தகத்தில் இந்தத் திருவகுப்பு திருப்புகழ்ப் பாடல்களுள் ஒன்றாகக் காணப்பட்டது. தவறுதலாகத் திருவகுப்புக்களுட் சேர்க்கப்பட்டதோ என்றும் ஒர் ஐயம் எழுகின்றது.