பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. வேல் வாங்கு வகுப்பு 457 31. (மருகன்) மருமகன்; (நிரம்பிய மதி) பூரண சந்திரன் போன்ற முகத்தைக் கொண்டுள்ள (மஞ்சரி) தளிர் போன்ற ஒளியினளாம், குஞ்சரி) (ஐராவதத்தாற் வளர்க்கப்பட்டவள், (வாகாம்பரை) வாகு - அழகான அம்பரை ஆடையை அணிந்தவளாகிய தேவசேனையைத் தோய்) அணையும் காங்கெயன் - கங்கையிற் பிறந்தோன் கந்தக்கடவுள் 32. (மகபதி தன்) இந்திரனுடைய (பதி) ஊராகிய பொன்னுலகுக்கு பகை - பகைவனாயிருந்த சூரன், கிழியும்படி - அறுபட்டழியும்படி, (அன்று) முன்னாளில் (அடல்) வலிமை (வாள்) ஒளி - இவை ஓங்கிய சிறந்து மேம்பட்டு விளங்கும் (வேல்) வேலாயுதத்தை வாங்கவே - செலுத்தவே. 25-32. பாரதப் போரை நடத்த வந்தவனும், துரியோதனாதியரை அழித்தவனும், பார்த்த சாரதியும், மகளிர் ஆடையைக் கவர்ந்தவனும், குழலூதி = நிரை புரந்தவனும், மருதிடைத் தவழ்ந்து சகடு உதைத்தவனும், புள்ளின் வாய் கீண்டவனும், பேயை அட்டவனும், யானையை அனுப்பித் தன்னைக் கொல்ல நினைத்த மாமன் கஞ்சனைப் பகைத்தவனுமான, அல்லது கஞ்சன் பகைத்தவனுமான திருமாலின் மருகன், தேவசேனை கணவன் - ஆகிய முருகவேள் சூரன் அழியும்படி வேலைச் செலுத்த 1-16 அடியார்களின் வருத்தமும் தீவினையும் ஒழிந்தன, ஜெயஜெய எனப் போற்றிய எங்கள் கலி தீர்ந்தது. வஞ்ச நெஞ்சினர் வாடினர், கடல் தீ மூண்டு வற்றிற்று, அஷ்ட கஜங்களும் அலறின, கி ரெளஞ்சம் பொடிபட்டது, மலைகள் பிளவுண்டு குகைகள் ஏற்பட்டன, இந்திரர் விண்ணுலக ஆட்சி பெற்றனர், மூவுலகிலும் அறநெறி பரவிற்று, பிரமன் சிறை பெற்று ஆணவம் அழிந்தான், தேவருலகு செழிப்படைந்தது, சசி (இந்திரன் மனைவி) சுமங்கலி வாழ்வு பெற்றனள், தேவர் சிறையினின்றும் மீண்டனர், சிங்கமுகனும் அவன் சுற்றத்தினரும் மாய்ந்தனர். சூரன் வேரொடும், அழிந்தான், தேவர்பயம் ஒழிந்தது: பூதம், காகம், கழுகு, பருந்து இவைகளுக்கு விருந் துணவு கிடைத்த து.