பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. புயவகுப்பு 467 11. விதமிகு பலவிதமான, பரத பரதநாட்டியத்தில் வல்ல, ன்ே: கணம் - தேவ மங்கையர்களின் கூட்டத்தில், மேல்தொறும் . ஒவ்வொருவரின் மேலேயும், லீலையாக - விளையாட்டாக, விமல சல்த்தினை - பரிசுத்தமான நீரை, (விண் திறந்து விண்ணை ஆகாயத்தில் திறந்து, வழிகண்டு (ஆகாச கங்கையினின்றும்) மொண்டு. கங்கை நீரை மொண்டு சி - வீசுவதாய்ப், பொலிந்தன - விளங்கின (வாகைப் புயங்களே) _* 12. விதரண தருவின் - கொடையிற் சிறந்த கற்பக விருகூடித்தின், மலரிட்ை செருகிய - மலர்கள் இடையிடையே செருகப்பட்ட கூதளமாலை, (நீபம்) கடம்புமாலை இவைகளை விபுதர் குலம் - தேவர் குலத்து, குலிசன் - குலிசாயுதனான இந்திரன், பயந்த பெற்ற, செவ்விய கைகளை உடைய, யானைக்கு - தேவசேனைக்குச் சூட்டுவதற்கு (இசைந்தன) உடன்பட்டன - ஒத்துக்கொண்டன (வாகைப் புயங்களே) 13. (விகசித மலர்ந்துள்ளதும், (தமரம்) ஒலிசெய்கின்ற (பரிபுரம்) பாதகிங்கிணி (அணிந்ததுமான) (முளரி) தாமரை யன்ன திருவடிகளைத் (தொழா) தொழுது, (அந்த) (அபிராம) அழகு வாய்ந்த (வேடர் விமலை) வேட்ர்களின் பரிசுத்தமான ப்ெண், தினைப்புனத்திலிருந்த (மங்கை) பெண் கிய வள்ளியின் கொங்கை கண்டு - கொங்கைகளைத் தரிசித்து வணங்க (வேளைப்புகுந்தன) சமயம் அறிந்து சென்றன (தழுவுதற்கு) (வாகைப்புயங்களே) தரு கொடையிற் சிறந்த கற்பக விருஷங்கள் - சந்தானம், தேவதாரம், கற்பகம், மந்தாரம், பாரிசர்தம் எனப்படும் தெய்வ மரங்கள். பிங்கலம். தேவதாரத்துக்குப் பதில் அரிசந்தனம் கூறப்படும். உம்பர்தரு - திருப். விநாயகர் 2. (3) நீபம் (கடம்பு), வெட்சி, குர் இவைகட்கு அடுத்தபடி முருகருக்குப் ப்ரியமான மலர் கூதளம் - திருப்புகழ் 960 பக்கம் 784 கீழ்க்குறிப்பு. 13(1) விகசித முளரி, தமர பரிபுர முளரி - வள்ளியின் திருவடிக் கமலத்தைக் குறிக்கும். பிடிநடைத் தாள்களும் கமலம் தணிகைப் புராணம் - களவு 43. (2) வேளைப் புகுந்தன - வேளை எனப்புக்கு நிற்கும் வித்தக, வேளை யெனும்படி சென்றிறைஞ்சிய பெருமாளே. திருப்புகழ் 1186, 1179, திருப்புகழ் 166 பக்கம் 387 கீழ்க்குறிப்பைப் பார்க்க