பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. புயவகுப்பு 473 21. (இருள் பொரு) இருளொடு மாறுபட்டு இருளை விலக்கும் (கிரணம்) ஒளியைக்கொண்ட (இரணிய) பொன்மயமானதும், வட வடக்கே உள்ளதும் (குல) சிறப்புள்ளதும், (பாரிய) பருத்த மேரு சாதி இனமென ஒத்து) மேருமலைக் கூட்டத்தைச் சார்ந்த வகையதைப் போன்று, உலகங்களில் எவ்விடத்திலும் (ப்ரகாசித்து நின்றன) ஒளிவீசி நின்றன (வாகைப்புயங்களே) 22. இயல் - இயற்றமிழாதிய முத்தமிழ் வல்ல (முநி) நக்கீரதேவர் (பரவ) திருமுருக்ாற்றுப்படை என்னும் அருமைப் பாவைப் பாடி வணங்க, ( சை) பொரு கால், ಲ್ಗ”ಟ್ಟ! பெரிய மலையிடத்தே မ္ဘိန္က က္ဆုံး மிகப் பெரிய கோரவுருவினதான, (இவுளி) குதிரைமுகம் கொண்டதான, கற் என்னும் பூதத்தின் (கொங்கை கொண்ட) கொங்கைகளைக் கொண்ட (சண்டம் - வலிமை வாய்ந்த மார்பைப் பிளவு செய்தன (வாகைப்புயங்களே) 23. (இபம்) யானை, (ரதம்) தேர், (துரகம்) குதிரை - ஆகிய படைகளைக் கொண்ட (நிசிசரர்) அசுரர் கூட்டம் (கெட) அழிந்து போகும்படி, (ஒரு ஒப்பற்ற சூரனுடைய மார்பைப் (பீறி) கிழித்து, அவனுடைய (உதிரப் புனல்) குருதி நீர் (ரத்தம்) செங்களம் - செந்நிறம் பூண்ட போர்க்களத்தில் (துளங்கி யாடி) கலங்கி ஆடுவதால் சிவப்பு நிறத்தை அடைந்தன (அல்லது) ஆட (அலைவீசச்) சிவந்தன - கோபித்தன (வாகைப்புயங்களே) 24. (எவை எவை கருதில்) எவை எவை வேண்டுமென நினைத்து விரும்பினாலும், அவை.அவைதம்மைத் (தருகொடை யால்) தருகின்ற கொடைச் சிறப்பால், (மணி) சிந்தாமணியையும், (மேகராசி) மேகக் கூட்டங்களையும், (சுரபி) காமதேனுவையும், (அவற்றொடு) அவையுடன் (சங்கம்) சங்கநிதியையும், கஞ்சம் - பதுமநிதியையும், (பஞ்சசாலத்தை) தெய்வ விருகூடிங்கள் ஐந்தின் கூட்டத்தையும் வென்று, மேம்பட்டு விளங்குகின்றன (வாகைப்புயங்களே) விநாயகர் துதி 2 பாடல், பக்கம் 10 அடிக்குறிப்பு: மேகம் கைம்மாறு கருதாது மழையைத்தந்து உலகைப் புரக்கின்றது. (மாரிமர்ட் ட்ென்னாற்றும் கொல்லோ உலகு. குற்ள் 211).