பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. சித்து வகுப்பு 511 92. (வித்தகன்) பேரறிவாளன்; சுவாமி, நிர்ப்பாவகன் - உருவம் இல்லாதவன் அல்லது தியானத்துக்கு எட்டாதவன், (சத்தியன்) மெய்ப்பொருளானவன், (ப்ரதாப வித்யாதரன்) பேர்பெற்ற கலைஞன் - கலைச்செல்வன் 93. விரத நட்பாளர் விரதங்களை அநுட்டிப்பதில் பிரியமுள்ளவர்கள், (பரியும்) காதல் கொள்ளும் (அசஞ்சலன்) சஞ்சலம் அற்றவன் - அசையாதவன், சலிப்பு (கவலை) அற்றவன், நிருதர் - அசுரர்களிடம் (நிட்டுரன்) கொடுமை காட்டினவன்; நிருதர் பயங்கரன் - அசுரர்களுக்கு அச்சம் (பயம்) தருபவன் 94. வீர மத லோக வேள் . வீரம் - மேன்மையான, மதம் (பக்திக் களிப்பை) மகிழ்ச்சியை உடைய (லோகம்) நன்மக்கள் - பெரியோர் (போற்றும், வேள் - முருகவேள், (காங்கெயன்) கங்கையில் தோன்றியவன், சூர ரண் - அச்சம் தரும் (ரணம்) போரில் வரும், சூர - சூரத்தனம் (வீரமுள்ள) சூர் சூரபத்மாவுக்கு (அந்தகன்) யம்னாய் விளங்கினவன் 95. வினை - வினை என்னும் பகையை (அறுப்பவன்) அழிப்பவனும், (நினைத்தது) அடியார்கள் நினைத்த என்ணங்களை முடிப்பவன் - கூட்டி வைப்பவனும் நிறைவேற்றுபவனும், மனத்துயர் - மனவேதனைகளைக் (கெடுத்து) தொலைத்து (எனை) என்னை (வளர்த்து அருள்) விருத்திக்குக் தொண்டுவந்து - உயர்நிலைக்குக் கொண்டுவந்து திருவருள் பாலித்த கிருபைக் கடலானவனும் ஆன 96. (வேலன்) வேலாயுதக் கடவுளுக்கு (வாய்த்த) உள்ள அடியேனால் பாடப்பட்டு அமைந்துள்ள (திருப்புகழை) திருப்புகழ்ப் பாடல்களைக் (கற்றவர்) ஆய்ந்து படித்தவர்கள் சீல்ம் ஏத்திய சீலத்தால் (நல்லறிவால்) புகழ்பெற்ற அல்லது சீலம் உடையவர் புகழ்கின்ற சித்தப்ர சித்தரே சித்தர்களுள் (பிரசித்தம்) பேர்ப்ெற்ற சித்தர்களாம், சகல சித்திகளும் கைவந்த பிரசித்தர்களாம் (புகழாளர்களாம்). "வரதா மணிநீ என ஒரில், வருதா தெதுதான் ஆதில் வாராது; இரதாதிகளால் நவ்லோகம் இடவே 鷺 இதில் ஏது" - என்னும் திருப்புகழ்ப் பாடலிற் (192) காண்க. "கருப்புகழாம் பிறசமயக் கதைகேளா தநுதினமுன் திருப்புகழை யுரைபோர்க்குச் சித்தியெட்டும் எளிதாமே" ( கைக் கலம்பகம் -1.)