பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. சித்து வகுப்பு:அநுபந்தம் 517 ஆயில் 15: இது பூதிகம் என்றும் வழங்கும் மரம். பட்டை உபய்ோகப்படும் வாதாதி முத்தோஷங்களையும் பழைய சுரத்தையும் போக்கும். பட்டைய்ை இழைத்து மேல் பூச, வெளுத்ததோல் (வெண்குட்டம்) கறுக்கும். ஆரைக்கீரை-10. ஒரு தண்டில் நான்கு இதழ்கள் கூடிய பூண்டு. இது சமைத்துண்ண நீரிழிதல், அழல்நோய் போம். குறிப்புரையும் பார்க்க - * ஆல்-12 இலை, பழம், விழுது, பால், பூ உபயோகப் படும். பால் அசைகின்ற் பல்ன்ல் இறுக்கும். விந்துவைப் பெருக்கும். பட்டை குடிநீரிட்டு ஹாய் கொப்புளித்தால் வாய்ப்புண் போம்; இல்ை - ங்கிக் கட்ட மேகக் கட்டி உடைந்து சீ(ழ்) நீங்கும்; ஃக்ே - பல் உறுதிக்கு நல்லது. ஆவிரை-15. இதுதான் ஆவாரம் செடி இலை, பூ, பட்டை உபயோகப்படும். நீரிழிவு, உட்சூடு, புண், எலும்பைப்பற்றிய சுரம் இவைபோம். பூவை வதக்கிக் கண்ணோய்க்கு ஒற்றடம் இடலாம். பூவைக் குடிநீரில் இட்டுப் பால் சேர்த்துச் ச்ாப்பிட உட்சூடு தண்யும். இரும்பிலி-15: குறிப்புரையிற் பார்க்க (பக்கம் 484). இருவேலி-10 வெட்டிவேர், குறுவேர் எனப்படும்; காமாலை, சுரம், தலைநோய், கழுத்து நோய், கண்ணோய் நீக்கும். குறிப்புரையும் பார்க்க (பக்கம் 483). இறலி.15. இது இத்தி' எனப்படும், இது கழிச்சல், பெரும்பாடு, உட்சூட்டுப் பிணி இவைகளைப் போக்கும். எருக்கிலை-11: எருக்கிலையினால் எலிக்கடி நஞ்சு, பாம்பு நஞ்சு, வயிற்றுப் புழு, மலக்கட்டு இவைபோம். இலையை வதக்கிக் கட்டிகளுக்குக் கட்ட அவை பழுத்து உடையும். இலையை உலர்த்திப் பொடி செய்து ஆறாத புண்களுக்குப் போடப் புண்கள் உலரும். எலிப்பகை இலை 24: பூனை வணங்கி எனப்படும் குப்பை மேனியின் இலை. இந்த இலையால் பல்லடி நோய், வயிற்று வலி, கோழை, திமிர்வாதம் நீங்கும். "தந்தமூலப்பிணிதித் தந்திடுபுண் சர்வவிடம் உந்துகுன்மம் வாதம் உதிரமூ- லந்தினவு சூலஞ் சுவாசம் தொடர் பீநிசங்கபம்போம் ஞ்ால்ங்கொள் மேனியதனால்" - (தே. கு)