பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. சித்து வகுப்பு:அநுபந்தம் 519 குணங்கள் துவையல் அரோசகத்தைப் போக்கும்; காலையில் கடுக்காயை ஓராண்டு சாப்பிட்டால் நரைதிரை மாறும்; பச்சைக் கடுக்காயைப் பாலில் அரைத்துச் சாப்பிட இருமல், கடுகுரோகணி-28; ஒரு செடி. இதன் வேர் பயன்படுவது மாந்தம், சுரம், சீதக் கழிச்சல் இவைகளைப் போக்கும். "புண்வயிறு நோயிவை பேர்ம் பொற்கொடியே பேதியுண்டாம் திண்கடுகு ரோகணிக்குத் தேர்". (அகத்தியர் குணபாடம்). கடுகுரோகணி_ கறுப்பு இனம். இதனால் சூதகக் கட்டு, காக்கை வலி, வெறி இவை போம்; பச்சை ம் - இது சுரம். பிள்ளைத்தாய்ச்சிக்கு உண்டாகும் வ இவைகளைப் போக்கும். - கத்தாரி.9; (கத்தரி) |్వ - பித்தம், கபம் இவைகளைப் போக்கும். காய் - சிரங்கை விளைவிக்கும். "கத்தரிக்காய் பித்தம் கனன்ற கபம் தீர்த்துவிடும் த்ெர்த்து சொறிசிரங்கைத் துாண்டிவிடும். H - மெத்தவுந்தான் பிஞ்சான கத்தரிக்காய் பேசுமுத்தோ ஷம்ப்ோக்கும் மஞ்சார் கு வழுத்து" - (அகத். குணபாடம்). கந்தகம்-18: ஒருவகைத் தாதுப் பொருள்; முருங்கை, வெண்வெங்காயம், வெள்ளைப்பூண்டு இவைகளையும் குறிக்கும். கருங்கணி-21 பருத்திவகை - இதனால் சீழ்வெள்ளை, குருதி வெள்ளை,புண், வீக்கம் போம். கற்பிசின்-24: இது பிசின்பட்டையாயிருக்கலாம். பட்டை ஒர் அங்குல கனம் உடையது. உடலின் வெப்பத்தைத் தணிக்கும். "வாய்வை - நிசமாகக் கொல்லும், உடம்பின் கொதிப்பை ஒருநொடியில் வெல்லும் பிசின்பட்டை" - (அகத்தியர் குணபாடம்). கற்றாழை 9; கற்றாழை வற்றல் பிணியைக் கண்டிக்கும்; மேகம், பெரு வியாதி, மூலம், குன்மம் இவைபோம். காஞ்சிரம்-10. இது எட்டி' , நரம்புகட்கு வன்மைதரும். வாந்தி, கழிச்சல் இவைகளை உண்டாக்கும்.