பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. சித்து வகுப்பு:அநுபந்தம் 525 செம்பிராகை 8. இது விளங்கவில்லை. செம்பை ராகி என்றிருக்கலாம். கருஞ் செம்பை இலையால் புண், கட்டி கரப்பான் போம். பூவ்ால் தலைக்குத்தல், சலதோஷம் நீங்கும். ராகி (8) என்பது கேழ்வரகு, கேழ்வரகின் கூழால் பெருவயிறு குணமாகும். எளிதில் செரிக்காது - உடலுக்கு வலுவைக் கொடுக்கும். உழைப்பாளிக்கு ஏற்றது. - செருப்படை 11: ஒரு படர்கொடி மந்தம், குன்மம், சூலை இவைதமை நீக்கும். = . செருப்படைக்கு வாதமந்தம் சேர்வான மேகம்.......... H. H. H. H. H. H. சூலையொடு வாத குன்மம் தோற்றா.........(அ.கு) தக்கோலம்-20: பாண்டு, சுரம் போக்கும். "பாண்டுசுரம் போகும் பகளிற் பலஞ் சேரும். தாது விர்த்தியாகும் தளர்ந்த மலமும் கட்டும், கோதகலும் தக்கோலம் கொள் (அ.கு.). குறிப்புரையும் பார்க்க (பக்கம் 486). தமரத்தை 11: இதன் பழம் உபயோகப்படும் "வாதபித்தம் வாதகபம் வாந்தி குரல்கம்மல் கண்ணோய் தாதுநஷ்டம் பித்தந் தலைநோயோ டோதுசித்தத் துற்ற பிரமையும்போம் ஒண்தொடியே! மாபுளிப்பாம் நற்றமரத் தம்பழத்தை நாடு" பழச்சாறு துணிகளில் உள்ள கறையைப் போக்கும். தழுதாழை-14: இது வாதமடக்கி, இலையும், வேரும் உபயோகப்படும். பக்கவாதம் முதலிய 80 வாத நோய்கள், மூக்கடைப்பு நோய்கள், குடைச்சல் நீங்கும். ஆனால் அழலை உண்டாக்கும். தாழை-25. இதன் சோற்றினால் சூதகம் §j தப்பாது உண்டாகும் பூ பசித் தீயை உண்டாக்கும்; விழுது குருதிப் பெருக்கை உண்டாக்கும்: சோகையைப் போக்கும். படுப்பார்க்கு வாந்தி, தலைசுழற்றல், விலகும். {=} எடுக்கும் எண்ணெய் தலைவலியைப் போக்கும். காதுவலிக்கும் இரண்டொரு துளி விடலாம். திப்பிலி-23: இது கொடிவகை உலர்ந்த திப்பிலி இருமல், குன்மம், பாண்டு, மயக்கம், மூக்கு காது கண்நோய்கள் ஆகிய நோய்களைப் போக்கும்.