பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. சித்து வகுப்பு அறுபந்தம் 535 அப்பனே, நாம் வெள்ளைச் சொல்லில் ரசவாதவித்தையை உனக்குத் தந்துவிட்டோம்; நீ எமக்குக் குருதட்சணை கொடு. இவ் வாத வித்தையைக் கொண்டு ஏழடுக்கு வீடு கட்டிக்கொள் என்று மாமிச உணவுகளைச் சாப்பிட்டுத் தாம்பூலம் பெற்றுக் கொண்டுவிட்டார். இதில் ரசவாத வித்தை எங்குளது என்பதை ஆராய்வோம். நாம் பொய்க்கு ஆளில்ல்ை என்று சத்தியம்செய்கிறார். மெய்யான ஞான பண்டித ரசவாதத்தை இச் சித்து வகுப்பின் இடையில் ரத்னச் சுருக்கமாக மூன்று நான்கிடங்களில் புதைபொருளில் சிலேடைப் ப்ொருள் வகையில் சுவாமிகள் கூறி முடிக்கிறார். 1. மாமூலி. மாண்டாரெலும் பணியுஞ்சடை ஆண்டார் இறைஞ்ச மொழிந்தது. 2. "மாறில் (முருகன்) தோத்திரவித்தை பலித் திடில்" (நிபந்தனையுட்ன் கூடிய து) . து அவனருள பரசாதம கைவந்தால மாடை சேர்க்க வருத்த முனக்கிலை" என்கிற சத்திய ரசவாதத்தைக் கூறியருளினார். 3. ரசவேதியைக் குறிக்கிறார்: அதாவது "எட்டும் இரண்டும் ஆறு தப்பாதுகொள்... என்று, ஓம் சரவணபவ....... ஒம்வசத்புவேநம ......" எனறு, 4. "எட்டிரண்டும் தப்பாது கொள்யாவும் வாய்ப்பது சத்தியம் ஏழு நாளில் சித்தியா கும்" அதாவது எட்டு(அ), இரண்டு (உ) சேர்ந்து ஓங்காரம்: ஆறு சடாகூடிரம். எனவே பிரணவத்தோடு கூடிய சடாகூடிரம். ஒம்சரவண பவ. ரஸவாத மந்திரத்தை 6)(ԼՔ நாள் இமைப் பொழுதும் விடாமல் கையாளுவையாகில் மூசையில் வைத்த அணிபணியாவும் தங்கமாய்விடும்; உன் மனதும் தங்க மாய்விடும். ஏன்? நீயே தங்கமாகி விடுவாய், இதுதான் ஸ்வாமி களின் சித்து வகுப்பிலுள்ள் புதைபொருள். -Ι Ο Ι -