பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/594

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. சிவகிரி வகுப்பு 587 பொழிப்புரை 1. (மெத்த மெத்த) மிக அதிகமாக (அக்ரமத்தின்) அக்ரமம். அநீதியான செயல்களைச் செய்தோரிடம், (மெத்த மெத்த மிக அதிகமான (விக்ரமத்தின்) பராக்ரமத்துடனே - (மெத்த மெத்த) மிக அதிகமான (உக்ர வெற்றி) உக்ரமும் கடுங் கோபமும், ஜெயமும் மிக்குள்ள (பாசமே) பாசக் கயிற்றையே, 2. விட்டு விட்டு - எறிந்தெறிந்து, (உறுக்கு உறுக்கு) கோபித்து அதட்டுக அதட்டுக, கட்டுக கட்டுக, குத்துக குத்துக, வெட்டுக வெட்டுக, (என்) - என்று கூறிச் (சினந்து) கோபம் கொண்டுள்ள (நமன்) எமன் (நாடியே) (என்னைத்) தேடி வந்து, 3. (சத்தமிட்டு) கூச்சலிட்டு (அதட்டி) வெருட்டிப் பயப்படுத்தி (நெட்டு எயிற்றினை) நீண்ட பற்களைக் கடித்து (உறுக்கு) கோபத்துடன் (தர்க்கமிட்டு) வாது செய் து (எனைப் பிடிக்க) என்னைப் பிடிக்க வரும் அந்த சமயத்திலே, 4. (தத்தளிக்கு புத்தியை) தடுமாறுகின்ற எனது புத்தியைத் (திடப்படுத்தி) தைரியப்படுத்தி (ஒத்திட) அதற்கேற்பத் (தணிப்பு உறுத்தி) மன அமைதியைப் புகட்டி (மெய்த் துணைக்கு) உண்மைத் துணை செய்ய (நீ) வந்தருள வேண்டும். s 5. (எத்தலத்தும்) எவ்விடத்தும், (எப்பதிக்கும்) எல்லா ஊர்களிலும், (எப்படிக்கும்) எல்லா நிலையிலும் (எச்சரித்து) எச்சரிப்பு - ஜாக்கிரதையுடன் (நற்பதத்தை) நல்ல பதம் - சிறந்த எழுத்தாகிய உனது ஆறெழுத்தை (உச்சரிக்கும்) ஜெபிக்கின்ற (நினைவாகியே) நினைவு தவறாது,

  • கார்மாமிசை காலன்வரிற் கலபத் தேர்மாமிசைவந் தெதிரப் படுவாய் கந்தரநுபூதி 10

(எப்போதும்) பதத்தை உச்சரிக்கு நினைவாகி, பதம் - எழுத்து - "அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி" சுந்தரர் 7-83-1.