பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/606

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. திருப்பரங்கிரி வகுப்பு 599 3. (ஒதின்) ஒதுவதால், (நெஞ்சு அயரார்) மனம் சோர் வடையாதவராய்த் தினந்தோறும், (திரிகாலமும்) காலை, உச்சி, மாலை ஆக மூன்று வேளைகளிலும் (தொழுவோர்) உன்னைப் பணிபவர்கள் (விரும்பியது ஏதும்) விரும்பின எல்லாப் பொருள்களையும் அன்புடனே தருகின்ற கிருபையுடனே (நீ வந்து (அநுபூதி) அனுபவஞானம் என்னும் செல்வத்தை (அவர்களுக்குத் தந்து (முன்) பழைமையதான (நூல்) சாஸ்திரங்களை கலைஞானங்களைக் (கடந்திடலே) கடந்த நிலையில் (அவர்கள்) கூடுமாறு (அவர்களைப்) (புரந்து) நீ காப்பாற்றி (அருள்கூரும்) அருள்மிக்கு நீ தருகின்ற (இங்கித சேவை) இனிமையான தரிசனத்தை (நான்) நம்பின வண்ணமே காணும்படி 4. (ஒகை) மகிழ்ச்சியுடனும் (வந்தனையாய்) நன்றி பாராட்டுடனும் (உன்னை) வணங்கின (இந்த) ஏழையாகிய என்னுடைய (சிந்தையுளே) மனதிலே, (உன்னை) நான் நினைக்கும் வேளை) சமயத்தில் (நீ) வந்து (இனிதாய்) மகிழ்வுடன் வரம் தந்தருள வேண்டுமென்று (அகமே) உள்ளத்திலே நான் வருத்தப்பட்டு (ஒதினன்.தினம்) தினந்தோறும் ஒதி வேண்டினேன். அங்ங்ணம் நான் (விளம்புதல்) முறையிடுவது நீ அறிந்தும் நீ அறிந்திருந்தும் (இது ஏன் இரங்கிலை) இவ்விஷயத்தில் நீ ஏன் இரக்கம் கொள்ளவில்லை! (அறிவேன் ஐயா) நீ இரங்க இல்லை என்பதை நான் அறிவேன், ஐயனே! 5. ஆதி முதல், அந்தம் முடிவு (அனாதி) ஆதியின்மை, விந்துவும் (சுக்கிலம்) நாதமும் (சோணிதம்) பிரியா நிறைந்த பிரியாமல் நிறைந்ததாய், அரூபம் இன்ப சொரூபம் ஆக இரண்டு நிலையுங் கொண்ட (சுந்தர சோதி) அழகிய ஜோதியாகவும், (மின்பொலி) ஒலி விளங்கும் நீதியம் பொருள் அம் நீதிப் பொருள் - அழகிய நீதிப் பொருளாகவும் நின்ற பராபர மூர்த்தி, (கருணாலயன்) கருணைக்கு இடமான மூர்த்தி, (புலவோர்) தேவர்கள் (இறைஞ்சிட) வணங்க, எதிர் - எதிர்த்து நின்ற காளி.