பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/609

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

602 முருகவேள் திருமுறை 19:திருமுறை திருப்பரங்கிரி வகுப்பின் சுருக்க உரை சாதி, குலம், குடி முதலிய இம்மைச் சிறப்புக்களும், சிவஞானமும், மேலான வாழ்வும், நோயின்மையும், சோர்வு, இறப்பு இவை இலாத பாக்கியமும், சிவபோகமும், சமநிலையும் கூடும் என்று அறிந்து உன்னுடைய இரண்டு திருவடிகளையே ஒதிப் புகழ்ந்து உள்ளம் சோர்வடையாமல் தொழுபவர் விரும்பிய்வற்றை அன்புடனே தந்து, அனுபவ ஞானத்தையும், கலைகடந்த ஞானத்தையும் அவர்களுக்கு நீ ஊட்டி அருள்புரியும் உன தரிசனத்தை நான் நம்பின வண்ணமே கண்டு உனது `ಿ, அருளைப் பெறவேண்டி உன்னைத் தியானிக்கும்போது நீ வந்து வரம் தரவேண்டும் என நான் முறையிடுவதை நீ அறிந்தும் இரங்குகின்றாயில்லை; நீ இரங்கவில்லை என்பதையும் நான் அறியேன், ஐயனே! பராபரன், க ாலயன், காளியுடன் வாதாடி நடனம் செய்தவன் ஆகிய பரமனது குமரனே! வேலாயுதனே! பராசரர் குமாரர் அறுவரும், விஞ்சையரும் தொழுதுவணங்கும் பரங்கிரி முருகேசனே! - : 0 : - திருவகுப்பு ஆராய்ச்சி திருப்புகழ் போலச் சந்தப்பாவால் அமைந்த இந்நூல் முருக்க் கடவுளின் சீர்பாதப் பெருமை, அடியார் பெருமை, வேலாயுதத்தின் பெருமை, உபதேசப் பெருமை, பிரச்ாதப் பெருமை, திருப்புகழ்ப் பெருமை, கடைக்க ணோக்கப் பெருமை, திருக்கரங்களின் சிறப்பு ஆகிய இவை தமை வகுத்து எடுத்து ஒதுவதால் நூலுக்குத் திருவகுப்பு என்னும் பெயர் வாய்ந்தது. "ஏழையி னிரட்டைவினை யாயதொருடற்சிறை, யிராமல் விடுவித்தருள் நியாயக் காரனும்" என வேளைக்காரன் வகுப்பிற் கூறிய திருவாக்கால் சுவாமிகள் மாநுடதேகம் நீந்துக் ளிரூபம் பெற்ற பிறகு திருவகுப்புப் பாடல்களை பாடி யிருத்தல் வேண்டும் எனத் தோற்றுகின்றது. இதனுண்மை திருப்புகழின் முக்கிய கருத்தாக உள்ள பெண்ணாசை யறுதலைப் பற்றி இத் திருவகுப்பில் எங்குங் கூறியில்லா மையானும், யம பயம் நீக்கிக் காத்தருள வேண்டும் எனத் திருப்புகழிற் பல இடத்தும் வேண்டின்வாறு வேண்டாமல் సీ: பெரும்பான்மைய முருகன் பெருமையையே கூறி உலகத்தாருக்கு உபதேசங்களையே எடுத்தோதும் உயர்நிலைப்