பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/629

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

622 முருகவேள் திருமுறை (10:திருமுறை பத்தாம் திருமுறை அருணகிரிநாதஸ்வாமிகள் அருளிச்செய்த கந்தரநுபூதி -: Ο Σ (அந்துந்வயம், பொ.உ. பொழிப்புரை, சு-உ-சுருக்க உரை: கு.உ. குறிப்புரை.) காப்பு நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருகத் தஞ்சத் தருள்சன் முகனுக் கிய்ல்சேர் செஞ்சொற் புணைமாலை சிறந்திடவே பஞ்சக் கரவானை பதம் பணிவாம். (பொ உ) நெஞ்சம் எனப்படும் (கனகல்லும்) கனத்த இளகாத கல்லும் நெகிழ்ந்து - இளகி, உருகும்ப்டி (தஞ்சத்து) அபயம் என் தன்னைச் சரண் அடைந்தவர்க்கு (அருள்) அருள்பாலிக்கின்ற ಕ್ಗಳ್ಗಿ சண்முகப்பெருமானுக்கு (உரியதாய) (இயல்சேர்) இயற்றமிழின்பாற்பட்ட (அல்லது) உழுவல் அன்பாற் பிறக்கும் (செஞ்சொற் புனை) செவ்விய சொல் மலரால் புனையப்பட்ட அலங்கரிக்கப்பட்ட (மாலை) இப் பாமாலையானது (சிறந்திடவே) சிறப்புடன் (என்றும் பூவுலகில்) விளங்கவேண்டிப் (பஞ்சக் கர) ஐந்து '# கரங்களை உடைய (ஆனை) விநாயகமூர்த்தியின் (பதம்) திருவடிகளைப் (பணிவாம்) பணிந்து போற்றுவோம்.