பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/662

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 655 (கு.உ.) () பாளைக் குழல் "பசும்பாளை பொலிந்து பிடித் தடக்கை பின்னிவிட்ட கூந்த லெனப் பேசு" இரத்தினச் சுருக்கம் 1, (2) இந்தச் செய்யுளிலும் முதல் இரண்டடிக்கும். பின் இரண்டடிக்கும் பொருத்தம் உண்டு. வள்ளியானவள் தலைப்பட்ட்ாள் நங்கை தலைவன் தாளே என்ற நிலையிற் பத்திசெய்ததனால் அவளைப் பணிந்து அவளிட்ட குற்றேவலையும் செய்யக் காத்திருந்தார் முருகவேள். அத்தகைய கருணைக் கட்லின் திருவடியை ஒருவாறு பணியும் தவநிலை எனக்குக் கிடைத்ததே! நானும் ஒரு Abಹ್ಲಿ == ஏனெனில் முருகன் 2ಿಸಿ அடியான் என்றால், நான் முருகனைப் பணிந்ததால் வள்ளியின் அடியார்க் கா யனாய் விட்டேன் என்றவாறு. 23. திருவடியை நினையாது கெடலாமோ அடியைக் குறியா தறியா மையினான் முடியக் கெடவோ முறையோ முறையோ வடிவிக் ரமவேல் மகிபா குறமின் கொடியைப் புணருங் குணபூ தரனே, (அந்) வடிவிக்ரம. பூதரனே! அடியைக் ...முறையோ! (பொ.உ.) (வடி) கூர்மை + கொண்டதும், (விக்ரமம்) பராக்ரமம் கொண்டதுமான வேல் ஏந்திய (மகிபனே) அரசே! குறமின்) குறமின்னாள் வள்ளியாம் (கொடியை) கொடி போன்ற நங்கையைப் (புணரும்) சேர்ந்த குணபூதரனே) குணமலையே! (அடியை) உனது திருவடியைக் (குறியாது) குறித்துத் யானிக்காமல், (அறியாமையினால்) ు ன்மையால் (முடியக்கெடவோ) அடியோடு_நான் அழிந்துபடலாமோ (முறையோ முறையோ) இது நீதியோ! நீதியோ (நீதியன்று என்றபடி). - - - (சு.உ) வேலனே! வள்ளி நாயகனே! உன் திருவடியைத் தியானியாது நான் அழிதல் நீதியோ. (கு.உ) (1) முறையோ முறையோ அடுக்குத்தொடர் இது. அவலக் குறிப்பில் வந்த அடுக்குத் தொடர்' நன்னூல் சூ 395, அவலம் - வருத்தம்; கிலேசம் ■