பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/671

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

664 முருகவேள் திருமுறை (10:திருமுறை மனத்தால் வாடி அடியார் இருந்தால் வாழ்ந்து போதிரே' என்புழிப்போல (சுந்தரர் 7.95). என்னை இப்படிச் செய்து விட்ப்யே! வாழ்வாய் இனி நீ? நீ வாழ்வையோ இனி என் வினாவாகக்கொண்டு நீ இனி விாழமாட்டாய் என்ற விடையையும் அதனின்றே கொள்வதும் ஒரு நிந்தாஸ்துதி யாகும். 32. கலைஞானம் போதும் போதும் கலையே பதறிக் கதறித் தலையூ டலையே படும்ா றதுவாய் விடவ்ோ கொலையே புரி வேடர்குலப் பிடிதோய் மலையே மலைகூறிடு வாகையனே. (அந்) கொலையே.....வாகையனே! கலையே...விடவோ. (பொ.உ) (கெள்லையே) கொலைத் தொழில்களையே (புரி) செய்கின்ற (வேடர்களின்) குலத்தில் வளர்ந்த (பிடி) பெண் யானை போன்ற வள்ளி (தோய்) ணரும் மலையே! மலையன்ன உன்னத நிலையனே! (மலை) கிரெளஞ்ச கிரியைக் கூறிடு-பிளவுசெய்த, வாகையனே - வெற்றிவேலன்ே (கலையே) கலைநூல்களையே (பதறிக் கதறி) கலக்கத்துடன் விரைந்து உருப்போட்டுக் கற்று (தலையூடு அலையே படுமாறு) தலை வேதனை படும்படி - தலையுள் மூளையே கலங்கும்படியான (அதுவாய்) அத்தன்மையனாய் - அந் நிலையனாய் (விடவோ) ஆய் விடவோ அந் நிலை வேண்டாம் என்றபடி (சு-உ) வேற்கடவுளே! நான் கலைகளைக் கற்று அச் சூழலில் அலைச்சல்பட வேண்டுமா! வேண்டாமே என்றபடி (கு.உ) (1) கலைகளைக் கதறி (முக்கியமாய்ச் சமய நூல்களைக் கதறிப் படித்து) அலைச்சல் உறுவதை அருணகிரியார் வெறுக்கின்றார். சமய விரோத சாங்கலை வாரிதியை நீந்த ஒணாது’ கதற்றும் அநேகம் கலைக்கட லூடுஞ் சுழலாதே' 'சிவகலை அலதினி உலக கலை ம் அலம் அலம்', கலகக் கலைநூல் பலகொண் டெதிர் கதறிப் பதறா , கதறிய கல்ை கொடு எனத் திருப்புகழில் வருவன காணலாம் (247, 257, 912, 1142, 1152.) lo