பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரம் 61 62. வேலின் பெருமை 1ஆலுக் கணிகலம் வெண்டலை மாலை யகிலமுண்ட மாலுக் கணிகலந் தண்ணந் துழாய்மயி லேறுமையன் காலுக் கணிகலம் வானோர் முடியுங் கடம்புங்கையில் வேலுக் கணிகலம் வேலையுஞ் சூரனு மேருவுமே. (பொ. உ) ஆலுக்கு - ஆலனுக்கு கல்லாலின் கீழ் வீற்றிருக்கும் சிவபிரானுக்கு அணிகலமாவ்து வெண்தலைமாலை (தசை தலையோடு); (அகிலம் உண்ட) - பூமியை உண்ட திருமாலுக்கு அணிகலமாவது (தன் அம் துழாய்) குளிர்ந்த அழகிய துளசி, மயில் வாகனத்தில் ஏறும் ஐயன் பிரானாகிய முருகவேளின் திருவடிக்கு அணிகலம் ஆவன தேவர்களின் முடியும், கடப்பமாலையும்; அவர் திருக் கையில் உள்ள வேலாயுதத்துக்கு அணிகலமாவன கடலும், சூரனும், (மேருவும்)கிரவுஞ்ச 鷺 LD, (சு - உ. சிவனுக்கு வெண்தலை மாலை, திருமாலுக்குத் துளசி மாலை. முருகன் திருவடிக்குத் தேவர்களின் திரு யும், கடப்ப மாலையும், வேலுக்குக் கடலும், சூரனும், ரெளஞ்சமும் - ஆபரணங்களாம். - (கு உ) ஆல் உ; ஆல் = கல்லால விருகூrம் அல்லது விஷம், Јул— Е இறைவன்; ئے۔agقl( நீழற் கடவுள், ஆலமுண்ட கடவுள் சிவபிரான்; முல்லை உ (முல்ல்ைநிலக் கடவுள்) என்றார் விஷ்ணுவை-கந்தரந்தாதி காப்பு 2. பூந்துருத்தி மகிழும் ஆலனை", "நாலுவேதியர்க் கின்னருணன்னிழல் ஆலன்"-அப்பர் 488-1,5-72-4 ‘மேருமேருமலை போன்ற பொன் மலையாகிய கிரெளஞ்சம் வெண்டலை - யுக முடிவில் முடிவுற்ற அரி, அயனுடைய வெண்டலை "காலாந்தரத் திருவர் தங்காலஞ் செய்யத் தரித்தனன் காண் சாழலோ" - திருவாசகம் தலைமாலை தலைக்கணிந்து" அப்பர் 4-9-1سـ "தலைக்குத்தலை மாலையணிந்ததென்னே சுந்தரர்-74-1 -- சிவனுக்கு வெண்தலை'மாலை அணிகலம் என்றதனால் அவரே சர்வ சங்கார மூர்த்தி என்பது பெறப்பட்டது. திருமால் பூமியை உண்டது திருப்புகழ் 267, பக்கம் 164, பாடல் 984, பக்கம் 846 குறிப்பு காந்தத்தில் உலகத்தை உண்டு தன் வயிற்றில் அடக்கிக்கொண்டு, ருமால் நித்திரை புரிவதால் அவர் உலகம் உண்டவர் எனக் கூறுவர்; இப் பாட்டின் 4ஆம் அடியை 40ஆம் பாட்டின் 3ஆம் அடியுடன் ஒப்பிடுக