பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/684

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 677 (3) பேசா அநுபூதி நிலை என்பது மெளன ஞான நிலை, கிடைத்த அநுபூதியின் தன்மை இத்தன்மைத்து என்று பிறருக்கு எடுத்துச் சொல்ல ஒண்ணாத நிலை, அநுபூதி 12, 28, 42, 49 எண்ணுள்ள பாடல்களைப் பார்க்க பேசா அநுபூதி பிறக்க எனதுளத்தில் 慕 பசாசை அகற்றுவாய் - தேசாரும் ற்பரானந்தா திருவ்ால வாயுறையுந் தற்பரா சொக்கநா தா" சொக்கநாத வெண்பா 9, 44. திருவடி தீகூைடியின் சிறப்பு சாடுந் தனிவேல் முருகன் சரணஞ் ஆடும் படிதந் ததுசொல் லுமதோ வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங் காடும் புனமுங் கமழுங் கழலே (அந்) சாடும் முருகன், விடும்.கழலே. சரணம்.....சொல்லுமதோ. (பொ.உ) (சாடும்) பகைவர்களைத் துகைத்துக்கொன்ற (தனி) ஒப்பற்ற (வேல்) வேலாயுதத்தை உடைய முருகன் - (வீடும்) மோட்ச நிலையிலும், (சுரர் மாமுடி) தேவர்களின் சிறந்த தலையிலும், வ்ேதமும்) நான்கு வேதங்களிலும், (வெங்காடும்) கொடிய காட்டிடையும், (புனமும்) தினைப்புனத்திலும், (கமழும்) விளங்கும், (சுழல்) தமது திருவடியைச் (சரணம்) அடைக்கல ஸ்தானமாகச் (சூடும்படி) ஆடிய்ேன் சிரசிற் குடும்படி (தந்தது) தந்தருளிய கருணை (சொல்லுமதோ) எடுத்துச் சொல்லும் தரத்ததா. (தரத்ததன்று என்றபடி) . (சு-உ) பெருமையும் அருமையும் வாய்ந்த தன் திருவடியை அடியேன் சூடும்படி வேல் முருகன் தந்த கருணை எடுத்துரைக்கும் தரத்ததன்று. (கு.உ) (1) சரணம் - திருவடி எனக்கொண்டு, சரணம் திருவடிஅது எத்தன்மைத்து எனில் வீடும், முடியும், வேதமும், காடும், புனமும் கமழும் கழல்; அதை அடியேன் குடும்படி தந்தது எனவும் பொருள் காணலாம். --