பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/685

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

678 முருகவேள் திருமுறை (10:திருமுறை (2) சூடும்படி தந்தது- திருவடி திகூைடி செய்தது: இறைவனது திருவடி திகூைடி பெற்ற அடியார்களிடம் யமன் அணுகான்; தெய்வத் தன்மை கூடுவதாகும். கோவாய் முடுகி அடுதிறற் கூற்றம் குமைப்பதன்முன் பூவார் அடிச்சுவ டென்மேற் பொறித்து வை" - என வேண்டினர் அப்பர் 4.96.1. "பூவார் அடிச்சுவ டென்தலைமேற்பொறித்தலுமே தேவான வாபாடித் தெள்ளேணம் கொட்டாமோ" - திருவாசகம் 11-7. திருவடி திrை பெறுவது பெரும்பேறாதலின் முருகன் கருணை சொல்லுந் தரத்ததன்று என்றார். (3) வீடும் சுரர் - இறந்துபடும் சுரர் எனவும் பொருள் காண்பர். சுரர்கள் அநித்யர் என்பது. (4) மோகூடி நிலையிலும், தேவர் சிரசிலும், வேதத்தும் விளங்கும் அத்துணைப் பெருமை வாய்ந்த கழல், பத்தியில் தனக்கு இணையில்லா வள்ளியின் பொருட்டு அவள் இருந்த காட்டிலும் புனத்திலும் திரிந்த கழல் என்னை ஒரு பொருள்ாகக் கருதி, என் தலையில் சூட்டப்பட்டதே இது என்ன ஆச்சரியம். நான் அடைந்த பாக்கியத்தை என்னென்று எடுத்து உரைப்பேன்; முருகன் கருணையை என்னென்று எடுத்துரைப்பேன் என்றவாறு தேவர் தலையிலும் என் பாவடி ஏட்டிலும் பட்டதன்றோ எனக் கந்தரலங்காரத்திலும் (15) வியந்துள்ளார் அருணகிரியார். (5) முருகன் காடும் புனமும் திரிந்தனர் அநுபூதி 40 குறிப்புரையும், வேடிச்சி காவலன் வகுப்பு அடி 20-ம் பார்க்க 45. மெய்ப்பொருள் வேண்டல் கரவா கியகல்வி யுளார் கடைசென் றிரவா வகைமெய்ப் பொருள் ஈகுவையோ குரவா குமரா குலிசா யுதகுஞ் சரவா சிவயோக தயாபரனே. (அந்) குரவா....... தயாபரனே! கரவாகிய. ஈகுவையோ.