பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/713

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

706 முருகவேள் திருமுறை (10-திருமுறை கந்தரநுபூதி ஆராய்ச்சி --- O -- கந்தரநுபூதிபெற்றுக் கந்தரநுபூதிசொன்ன எந்தையருள் நாடி யிருக்குநாள் எந்நாளோ" - தாயுமானவர். 麟 கந்தபிரான் செய்த உபதேசச் சிறப்பையும் அப்ப்ரானது திரு வருட் பிரசாதத்தின் பெருமையையும் பேசும் நூலாதலின் இந் நூலுக்குக் கந்த ரநுபூதி என்னும் பெயர் போந்த்து. (அநுபூதி திருவருட் பிரசாத அனுபவஞானம்), முருக்பிர்ான் தடுத்தாட்கொண்டு திருவடி 'டி. மெளனோப்தேசஞ் செய்த பிறகு இந் நூலை ಸಿನೆ; இயற்றினர் எனபது. "எனையாண்ட இடந்தானோ பொருளாவது" (3), மெய்ப்பொருள் பேசியவா" (8), (11); "முருகன் .சும்மா இரு சொல்லற என்றலுமே" (12), "உபதேசம் உணர்த்தியவா" (20), வேலவன் அன்று ஒவ்வாததென உணர்வித்த து" (30), "தீதாளியை யாண்டது" (38), "நினதன்பருளால்.......பேசா அநுபூதி பிறந்தது" (43), "முருகன் சரணம் குடும்படி தந்தது" (44) எனவருந் திருவாக்குகளால் அறியக் கிடக்கின்றது. இந் நூல் ஐம்பத்தொரு செய்யுள்கள் கொண்ட அற்புதச் சிறு நூல் பொருட் சிறப்பில் இந் நூலுக்கிணையாம் நூல் பிற இல்லை யென்பது சரதம். ஐம்பத்தொரு செய்யுள்களுக்கு மேற்பட்டனவாய் அச்சிடப்பட்டுள்ள பாடல்கள் அருணகிரியாருடைய திருவாக்கு அல்ல என்பதில் ஐயமில்லை. இனி, ஒரு சாரார் பேசா வநுபூதி பிறந்ததுவே" என்னும் 43ஆவது செய்யுளொடு நூல் முடிவுபெறுகின்றது எனவுங் கூறுவர்; எனினும், மேற்கொண்ட எட்டுச் செய்யுள்களின் வாக்கும் விசேடமாகவே தோன்றுவதால் இவ் வாராய்ச்சியில் 51 செய்யுள்களைக் கொண்டது . இந் நூல் статті, கொள்ளப்பட்டுளது. இக் கொள்கை "அநுபூதி ஐம்பதுமே யாருயிர் பேரின்ப வநுபூதி நல்கு மணி" என வரும் தணிகையுலாவினாலும் வலியுறுகின்றது.