பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/745

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

738 முருகவேள் திருமுறை (10-திருமுறை 4. (கனக அசலத்தை) பொன்மலையாம் மேருமலையைக் கடைந்தது போன்ற் பொன் ஒளியையும், (முனையிட்டு) கூர்மையையும் கொள்ளும்படி அமைத்ததற்கு (கடுக்கின்ற) ஒப்பான (துங்க) பரிசுத்தமான (நெடுவேல்) நீண்ட வேலாயுதம் - எது எனில் அதுதான் - 5. (தண்டம்)கெளமோதகி என்னும் கதையையும் (தண்டாயுத்த்தையும்), (தது) சாரங்கம் என்னும் வில்லையும், (திகிரி) சுதர்சனம் என்னும் சக்கரத்தையும், பாஞ்ச சன்யம் என்னும் சங்கையும், (கட்கம்) நாந்தகம் என்னும் வாளையும் கொண்டுள்ள (தானவ அந்தகன்) அசுரர்களுக்கு யமனாயிருந்தவன், மாயம் வல்லவன் 6. (தழல்விழி) நெருப்பை வீசும் கண்களையும், (கொடு வரி) வள்ைந்த வரிகளையும் (பரு உடல்) பருத்த உடலையும், (பஃறலை) ப்ல தலைகளையும், (தமனியச் சுடிகையின்மேல்) பெர்ன்னிறமான முடிகளையும் கொண்ட (ஆதிசேடன்) மேல் 7. (வண்டு) வண்டுகள் (ஒன்று) பொருந்தும் (கமலத்து மங்கையும்) செந்தாமரையில் வாசம் செய்யும் இலக்குமியும், (கடலாடை மங்கையும்) கடலை ஆடையாகக்கொண்ட பூதேவியும் (பதம் வருடவே) தமது கால்களை (வருட) பிடிக்க 8. (மதுமலர்) தேன் நிறைந்த செந்தாமரை போன்ற (கண்துயில்) கண்கள் துயில்கின்ற (முகுந்தன்) திருமாலின் மருமகன், ர்த்தி ஆகிய முருக்வேளின் (வாகை) வெற்றி விளங்கும் திருக்கையில், உள்ள வேலாயுதமே. (க.உ) திருமால் மருகன் - முருகன் திருக்கை வேலே சூரசம்மாரம் செய்தது என் அறிக. (கு.உ) (4) கனகாசலத்தைக் கடைந்தது போன்ற பொன் ஒளியை வேல் கொண்டிருப்பதால்தான் வேல் தங்க வேல்' மாழைக்கதிர் வேல்' (திருப்புகழ் 608) எனப் பெயர் பெற்றது. கனகர்சலத்தைக் கடந்து முன்னயிட்டுக் கடுக்கின்ற என்ற பாடத்துக்கு - கனகர்சலம் - கிரெளஞ்சத்தைக் (கடந்து) வென்று (முனையிட்டு) போர் செய்து (கடுக்கின்ற) கோபித்த - எனப் பொருள்காண்க. (1-4) வேலின் வீரத்தைப் பாடல் 2-ன் முதல் நான்கு அடிகளிலும் பார்க்க.