பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/781

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

774 முருகவேள் திருமுறை {10-திருமுறை திலக மயிலில்வரு குமரன் வரிசைபெறு சேவல் தனைப் பாட 'வந்தே சமர்பாரு மிண்டா கியகய மாமுக னைக்கோறி சிவன்கோ டொன்றை ஒடித்துப் பாரதம் மாமேருவிலெழுதிப் "பைந்தார் கொடுபல ராவணன் அன்பொடு பணிசிவலிங்கமதைப் போர்மிசை வைத்த விநாயகன் முக்கட் பரமன் துணையாமே. (பொ.உ) (1) பூங்கொத்துக்கள் நிறைந்து, குழல் வாத்தி யம் போல (அல்லது பூங்கொத்துக்கள் நிறைந்த கூந்தலில்) வரி. இசைப் பாட்டுக்களைப் பர்டும் வண்டுகள் ஒலிசெயும் தன்மைகொண்டு, ஏழிசைகளும் மருட்சி அடையும்படியாக 2. மழலைக் குதலைப் பேச்சுக்களைப் பேசி அருளும் கவுரி, தன் வயத்தினள் ஆகிய பார்வதியின் குமாரன், இனிமையைக் கொண்டுள்ள அழகிய 3. செந்தாமரைக் காடு பொலியும் நந்தவனங்கள் உள்ள (அழியாத சோலைகள் உள்ள) திருச்செந்துளரிலும் பிற தலங்கள் எங்கிலும் விளங்குபவன், 4. சிறந்த மயில்மீது எழுந்தருளும் குமரமூர்த்தி, ஆகிய முருகவேளின் கீர்த்திபெற்ற சேவலைப் பாடுதற்கு 5. எதிர்த்து வந்து போர்புரிந்த மதம் கொண்ட கஜமுகா சுரனைக் கொன்றும், 6. வலிய தமது தந்தம் ஒன்றை ஒடித்து அதுகொண்டு பாரதக் கதையை மேருமலையில் எழுதியும், 7. பசுமை கொண்ட மாலைகளைச்சூட்டி வலிய ராவணன் அன்பொடு பணிந்துபூசித்த சிவ்லிங்கமாம் (மகாபலேசுரரைப்) 8. பூமியில் (கோ கர்ணத்தில்) வைத்தவரும் மூன்று கன்களை உடையவரும் ஆன விநாயக மூர்த்த துணை புரிவார்.