பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/785

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

778 முருகவேள் திருமுறை (10-திருமுறை 4. பேய்கள் ஆகிய இவைகளை அவை கலக்குண்டு அலறும்படி மடமட என்று தன்னுடைய கை நகங்களாற் பிடுங்கிக் கொத்தும்; அது எது என்றால். 5. மலைகள் பலவற்றை இடமாகக் கொண்டு, மதம் பிடித்த காட்டானைகளும், தூண்களும் இவர்க்கு முன் தம் எம்மாத்திரம் எனப் பணியும்ப்டி உள்ள சமணர்கள் கிடுகிடு என்று அஞ்சும்படி, நடனத்தை 6. தண்டைகளும் சிலம்புகளும் கலின் கலினென்று ஒலித்தத் தனது சிறிய திருவடியின் அழகுடன் புரியும் 7. திரிபுரங்கள் எரிந்து விழச் சிரித்த இறைவன், வேதங்கள் அறிந்து போற்றும் சிவபிர்ான் பெற்ற குமர்மூர்த்தி. 8. (அஞ்ஞான)இருளை நீக்கும் ஞான சூரியன், முருகன், சரவணபவன் குகமூர்த்தி ஆகிய செவ்வேளின் அழகிய கொடியாக விளங்கும் சேவல்த்ான் அது. (க.உ) சமணர்களை அழித்து நடனம் புரிந்த முருகனது கொடியாகிய சேவல் எத்தகைய பேய் பிசாசுகளையும் வெருட்டி ஒட்டிவிடும். (கு.உ.) (1) கழுது - பேய்; நவிரம் - மயிர் : பேய்களின் மயிர் எரி உருவம். பேய்கள் எரிதலையொடு, செந்தி எழக் கொளுந்தியன்ன குஞ்சிவெஞ் சிரத்தவே - தக்கயாகப்பரணி 58, 121. (4) கடி = பேய். (5) தரணி = மலை (பிங்கலம்): சமண குருமார் யானைகள் போல மலையிடங்களில் வசித்தார்கள். தூண்போல நிர்வான மாயிருந்தார்கள் என்பதைக் குறிக்க மதகரிகள், தறி’ எனப்பட்டார் - தறி = துரண். "மா கதக் கரிபோல் திரிந்து". சம்பந்தர் 3.39.2. "தறிபோலாஞ் சமண்ர்". சம்பந்தர் 1.115.10. "ஆனை மாமலை ஆதியாய இடங்களிற் பல அல்லல்சேர் ஈனர்கள் - சம்பந்தர் 3.39-1. சமணர்களைச் சம்பந்தப் பெருமான் அச்சமுறும்படி செய்த லீலை குறிப்பிடப்பட்டுளது.