பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/807

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145. 150. 155. 160. 165. 170. 175. முருகவேள் திருமுறை (11:திருமுறை நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் மென்மொழி மேவலர் இன்னரம் புளர நோயின் றியன்ற யாக்கையர், மாவின் அவிர்தளிர் புரையு மேனியர், அவிர்தொறும் பொன்னுரை கடுக்குந் திதலையர், இன்னகைப் பருமந் தாங்கிய பணிந்தேந் தல்குன் மாசின் மகளிரொடு மறுவின்றி விளங்கக் கடுவோ டொடுங்கிய துாம்புடை வாலெயிற் றழலென வுயிர்க்கு மஞ்சுவரு கடுந்திறற் பர்ம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் புள்ளனணி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேறு வலவயி னுயரிய பலர்புகழ் திணிதோள் உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண் மூவெயின் முருக்கிய முரண்மிகு செல்வனும், நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல் வேள்வி முற்றிய வென்றடு கொற்றத் தீரிரண் டேந்திய மருப்பின் எழினடைத் தாழ்பெருந் தடக்கை யுயர்த்த யானை எருத்த மேறிய திருக்கிளர் செல்வனும், நாற்பெருந் தெய்வத்து நன்னகர் லைஇய உலகங் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப் பலர்புகழ் மூவருந் தலைவ ராக ஏமுறு ஞாலந் தன்னிற் றோன்றித் தாமரை பயந்த தாவி லூழி நான்முக ஒருவற் சுட்டிக் காண்வரப் பகலிற் றோன்றும் இகலில் காட்சி நால்வே றியற்கைப் பதினொரு மூவரோ டொன்பதிற் றிரட்டி யுயர்நிலை பெறீஇயர், மீன்பூத் தன்ன தோன்றலர், மீன்சேர்பு வளிகிளர்ந் தன்ன செலவினர், வளியிடைத் தீயெழுந் தன்ன திறலினர், தீப்பட உருமிடித் தன்ன குரலினர், விழுமிய உறுகுறை மருங்கிற்றம் பெறுமுறை கொண்மார் அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத் தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள் ஆவினன்குடி யசைதலும் உரியன். அதா அன்று.