பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/812

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை 805 குன்ற மெறிந்தாய் குரைகடலிற் சூர் தடிந்தாய் புன்றலைய பூதப் பொருபடையாய் - என்றும் இளையாய் அழகியாய் ஏறுார்ந்தான் ஏறே உளையாயென் னுள்ளத் துறை (1) குன்ற மெறிந்ததுவுங் குன்றப்போர் செய்ததுவும் அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும் - இன்றென்னைக் கைவிடா நின்றதுவுங் கற்பொதும்பிற் காத்ததுவு மெய்விடா வீரன்கை வேல். (2) வீரவேல் தாரைவேல் விண்னோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்புங் குன்றுந் தொளைத்தவே லுண்டே துணை. (3) இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்குங் கொன்னவில்வேற் சூர் தடிந்த கொற்றவா முன்னம் பணிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட தனிவேலை வாங்கத் தகும். (4) உன்னை யொழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை யொருவரையான் பின்செல்லேன் பன்னிருகைக் கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்திவாழ் வே. (5) அஞ்சு முகந்தோன்றில் ஆறு முகந்தோன்றும் வஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும் - நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலுந் தோன்றும் முருகாவென் றோதுவார் முன். (6) --- * 'வெஞ்சமரந்தோன்றில் வேல் தோன்றும் என்றும் பாடம்