பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/818

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பரிபாடற் பகுதிகள் 811 15. ஒரு நிலைப் பொய்கையோ டொக்கும் நின்குன்றின் அருவிதாழ் மாலைச் சுனை

  • * * * *

125. உடம்புணர் காதலரும் அல்லாருங் கூடி கடம்பமர் செல்வன் கடிநகர் பேன மறுமிடற் றண்ணற்கு மாசிலோள் தந்த நெறிநீ ரருவி யசும்புறு செல்வம் மண்பரிய வானம் வறப்பினும் மன்னுக மா 130. தள்ைபரங் குன்றம் னக்கு. (3) -(ஆசிரியர் நல்லந்துவனார் பாட்டு). அடி 47 ஆதித்தர் ாக உருத்திரர் ஈறாக முப்பத்து மூவரையும் கூறின்ார். ஆதித்தர் 10+2- பன்னிருவர்: மருத்துவர் இருவர் (அசுவினி தேவர்கள், வசுக்கள் எண்மர்) நாதர் உருத்திரர் பதினொருவர். அடி 7: இந்திரன் முதலிய திசை காப்பாளர் எண்மர். அடி 9 விழுத்தவ முதல்வர் முனிவர்கள் அடி 10-11: நின்னைக் காண்டல் காரணமாக மண்மிசை வந்து உறையும் இடமாகா நின்றது; ஆதலாற் பரங்குன்று அவர் பழைய இடமாகிய இமயக் குன்றத்தை ஒக்கும்" அடி 1216 'அவ் விமயக் குன்றின்கண் சிறப்பெய்தி நின்னையின்ற தாமரையினது மின்போலும் இணர் உதிராத வற்றாப் பொய்கை ஒக்கும் நினது குன்றின் அருவி தங்கும் ஒழுங்குபட்ட சுனை" அடி 125.130: "பரங்குன்றமே! தம்முட் பிரியாத மகளிரும் மைந்தரும், அல்லாத வரம் வேண்டுவோரும் கூடி மறுமிடற் றண்ணிற்கு மாசிலோள் தந்த (சிவபிரானுக்கு உமையாள் தந்த) கடம்பமர் செல்வன் கடி நகரை வழிபட.மண் வருந்த மழை வறந்ததாயினும் நெறிநீர் அருவி அகம்பு மிகுஞ் செல்வம் நினக்கு மன்னுவதாக" மா வியங்கோளசைச் சொல். முருகற்கு இடமாகிய பரங்குன்றை வருணித்த முகத்தால் எதிர்முகமாக்கியும் படர்க்கையாக்கியும் அவனையே வாழ்த்தி முடித்தமையிற் கடவுள் வாழ்த்தாயிற்று.