பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/819

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

812 முருகவேள் திருமுறை (11:திருமுறை 9. 81-85. கற்பினை நெறியூடற் பிணைக் கிழமை நயத்தகு மரபின் வியத்தகு குமர! வாழ்த்தினேம் பரவுதும் தாழ்த்துத்தலை நினையா நயத்தலிற் சிறந்தனம் அடியுறை பயத்தலிற் சிறக்க நாடொறும் பொலிந்தே. (4) -(குன்றம் பூதனார் பாட்டு). கற்புப் பொருந்திய நெறியை யுடைய தேவியரது அன்பு பொருந்திய அவ்வூடலுரிமையை நயத்தற் கேற்ற பண்பினை உடைய குமர! யாம் நின்னை வணங்கி வாழ்த்தி வேண்டிக் கொள்ளா நின்றேம்; அன்பாற் சிறந்த எம் அடிக்கணுறைவு நாடோறும் பொலிந்து பயன்தருதலொடு சிறக்க என்று. 14. 18:32. ஆர்மருங் கறுத்த சுடர்ப்படை யோயே கறையில் கார்மழை பொங்கி யன்ன நறையில் நறும்புகை நணியமர்ந் தோயே! அறுமுகத் தாறிரு தோளால் வென்றி நறுமலர் வள்ளிப் பூநயந் தோயே! கெpஇக் கேளிர் சுற்ற நின்னை எழி இப் பாடும் பாட்டமர்ந் தோயே! றந்த ஞான்றே நின்னை உட்கிச் சிறந்தோர் அஞ்சிய சீருடை யோயே! இருபிறப் பிருபெயர் ஈர நெஞ்சத் தொருபெயர் அந்தணர் அறண்மர்ந் தோயே அன்னை யாகலின் அமர்ந்தியாம் நின்னைத் துன்னித் துன்னி வழிபடு வதன்பயம் இன்னும் இன்னும் அவை யாகுக தொன்முதிர் மரபினின் புகழினும் பலவே. (5) -(கேசவனார் பாட்டு). சூரைக் கிளையொ டறுத்த வேல! கார் காலத்து வெண்மேகம் கிளர்ந்தாலன்ன நறிய அகில் முதலியவற்றால் புகைத்த நறும் புகையை மிக விரும்பினோய்! ஆறு முகத்தையும் ஆறிருதோளையும் உடையையாய் அழகாற் பிற மகளிரை