பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/835

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

828 (3) (4) (5) (6) (7) (8) (9) (10) முருகவேள் திருமுறை (11:திருமுறை ஆரலை வாயிடைத் தொலைத்து மார்புகீன் ரேலை வாயிடும் எஃகம் ஏந்தியே வேரலை வாய்தரு வெள்ளி வெற்பொரீஇச் சீரலை வாய்வரு சேயைப் போற்றுவாம். (35) காவினன் குடிலுறு காமர் பொன்னகர் மேவினன் குடிவர, விளியச் ஆர்முதல் பூவினன் குடிலையம் பொருட்கு மாலுற ஆவினன் குடிவரும் அமலற் போற்றுவாம். (36) நீரகத் தேதனை நினையும் அன்பினோர் பேரகத் தலமரும் பிறவி நீத்திடும் தாரகத் துருவமாம் தலைமை எய்திய ஏரகத் தறுமுகன் அடிகள் ஏத்துவாம். (37) ஒன்றுதொ றாடலை ஒருவி ஆவிமெய் துன்றுதொ றாடலைத் தொடங்கி ஜவகை மன்றுதொ றாடிய வள்ளல் காமுறக் குன்றுதொ றாடிய குமரற் போற்றுவாம். (38) எழமுதி ரைப்புனத் திறைவி முன்புதன் ழமுதி ரிளநலங் கிடைப்ப முன்னவன் மழமுதிர் களிறென வருதல் வேண்டிய பழமுதிர் சோலையம் பகவற் போற்றுவாம். (39) ஈறுசேர் பொழுதினும் இறுதி யின்றியே மாறிலா திருந்திடும் வளங்கொள் காஞ்சியிற் கூறுசேர் புனைதரு குமர கோட்டம்வாழ் ஆறுமா முகப்பிரான் அடிகள் போற்றுவிாம். (40) - (கடவுள் வாழ்த்து). (திரு அவதாரம்) அருவமும் உருவு மாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக் கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டுங் கொண்டே ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலக்ம் உய்ய, (41) (1-11-92). (சிவபிரான் தேவிக்கு உரைப்பது) நன்முகம் இருமுன் றுண்டால் நமக்கவை தாமே கந்தன் தன்முக மாகி உற்ற தாரகப் பிரம மாகி முன்மொழி கின்ற நந்தம் மூவிரண் டெழுத்தும் ஒன்றாய் உன்மகன் நாமத் தோரா றெழுத்தென உற்ற அன்றே