பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/836

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. கந்தபுராணம் 829 (11) ஆதலின் நமது சத்தி அறுமுகன், அவனும் யாமும் பேதகம் அன்றால், நம்பொற் பிரிவிலன் யாண்டும் நின்றான் ஏதமில் குழவி போல்வான், யாவையும் உணர்ந்தான், சீரும் போதமும் அழிவில் வீடும் போற்றினர்க் கருள வல்லான்(43) (1-14-18, 19) (தேவர்கள் துதிப்பது) (12) கந்தநம ஐந்துமுகர் தந்தமுரு கேசநம கங்கை உமைதன் மைந்தநம பன்னிரு புயத்தநம நீபமலர் மாலைபுனையும் தந்தை நம ஆறுமுக ஆதிநம சோதிநம தற்பரமதாம் எந்தை நம: என்றும்இளை யோய் நம: குமாரநம: (என்று தொழுதார்). (44) (1-14-82) (துதி) (13) ஊரி லான்குணங், குறியிலான், செயலிலான், உரைக்கும் பேரி லான்ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர் சாரி லான்வரல் போக்கிலான் மேலிலான் தனக்கு நேரி லான் உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றான். (45) * (2-1-1) (துதி) (14) விரிஞ்சன்மால் தேவராலும் வெலற்கரும் விறலோனாகிப் பெருஞ்சுரர் பதமும்வேத ஒழுக்கமும் பிறவும் மாற்றி அருஞ்சிறைஅவர்க்குச்செய்த அவுணர்கோன் ஆவிகொள்வான் பரஞ்சுடர் உருவாய்வந்தகுமரனைப்பணிதல்செய்வாம். (3-1-1) (46) (இந்திரன் மகன் சயந்தன் கனவில் முருகவேள் அடைதல்) (15) வீறு கேதனம் வச்சிரம் அங்குசம் விசிகம் மாறி லாத வேல் அபயமே வலம் இடம் வரதம் ஏறு பங்கயம் மணிமழுத் தண்டுவில் இசைந்த ஆறி ரண்டுகை அறுமுகங் கொண்டுவேள் அடைந்தான். (3-10-4) (47) வீரவாகுதேவர் குரனக்கு உரைப்பது (16) ஈசனே அவன் ஆடலால் மதலையா யினன்காண் ஆசிலா அவன் அறுமுகத் துண்மையால் அறிநீ பேசில் ஆங்கவன் பரனொடு பேதகன் அல்லன் தேசுலா அகன் மணியிடைக் கதிர்வரு திறம்போல். (48)