பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/837

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

830 முருகவேள் திருமுறை (11:திருமுறை (17) ஆதி யாகிய குடிலையும் ஐவகைப் பொறியும் வேதம் யாவையும் தந்திரப் பன்மையும் வேறா ஒத நின்றிடு கலைகளும் அவ்வவற் றுணர்வாம் போதம் யாவையும் குமரவேற் பொருவிலா உருவம். (49) (18) எங்கனும் பணி வதனங்கள் எங்கனும் விழிகள் எங்கனும் திருக் கேள்விகள் எங்கனும் கரங்கள் எங்கனுந் திருக் கழலடி எங்கனும் வடிவம் எங்கனுஞ் செறிந் தருள்செயும் அறுமுகத் திறைக்கே (50) (3-12-129, 132, 133) சிங்கமுகாசூரன் சூரனுக்கு உரைப்பது (19) வேதக் காட்சிக்கும் உடநிடத் துச்சியில் விரித்த போதக் காட்சிக்கும் காணலன் புதியளிற் புதியன் மூதக் கார்க்கு மூ தக்கவன் முடிவிற்கு முடிவாய் ஆதிக் காதியாய் உயிர்க்குயி ராய்நின்ற அமலன். (51) 3-21-127. (துதி) (20) நாரணன் என்னும் தேவும் நான்முகத் தவனும் முக்கட் பூரணன் தானுமாகிப் புவிபடைத் தளித்து மாற்றி ஆரண முடிவுந் தேறா அநாதியாய் உயிர்கட் கெல்லாம் காரண ணாய மேலோன் கழலினை கருத்துள் வைப்பாம். (4-1-1) (52) (சூரன் மகன்) இரணியன் சூரனுக்கு உரைப்பது. (21) வாசவன் குறையும் அந்தண் மலரயன் குறையும் மற்றைக் கேசவன் குறையும் நீக்கிக் கேடிலா வெறுக்கை நல்க ஆசிலோர் குழவி போலாய் அறுமுகங் கொண்டான் எண்டோள் ஈசனே என்ப நல்லாற் பிறிதொன்றை இசைக்க லாமோ. (53) (22) கங்கைதன் புதல்வன் என்றும் கார்த்திகை மைந்தன் என்றும் செங்கண்மால் மருகன் என்றும் சேனையின் செல்வன் என்றும் பங்கயன் முதலோர் தேறாப் பரஞ்சுடர் முதல்வன் தன்னை இங்கிவை பலவுஞ் சொல்வ தேழைமைப் பால தன்றோ. (54) (4–7–29-30) இலக்களில் ஒருவனாகிய விசயன் முருகரைத் தியானித்தல் (23) ஆறுமா முகப்பிரான் அன்றி இவ்விடை வேறொரு துணையிலை மெய்ம்மை ஈதெனத் தேறினன் அவனடி சிந்தை செய்தனன் மாறிழி அருவிநீர் வழியுங் கண்ணினான். (4-9-76) (55)