பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/838

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. கந்தபுராணம் 831 முருகவேளின் வீரத்தைப் பானுகோபன் சூரனுக்கு உரைப்பது (24) ஆர ணன்தனை உலகொடும் உண்டுமுன் அளித்த கார ணன்தனி ஆழியைக் களத்திடை அணிந்த தார கன்தனை நெடியமால் வரையொடு தடிந்த வீர வீரனை யாவரே வன்மையால் வெல்வார். (56) . (4-11-15) வீரவாகுதேவர் முருகரிடம் விண்ணப்பிக்கும் வேண்டுகோள் (25) கோலம் நீடிய நிதிபதி வாழ்க்கையும் குறியேன் மேலை இந்திரன் அரசினைக் கனவினும் வெஃகேன் மால யன்பெறு பதத்தையும் பொருளென மதியேன் * சால நின்பதத் தன்பையே வேண்டுவன் தமியேன். (57) (4-11-154) சூரன் முருகவேளின் விசுவரூபத்தைக் கண்டு வியத்தல் (26) கோலமா மஞ்ஞை தன்னிற் குலவிய குமரன்தன்னைப் பாலனென் றிருந்தேன் அந்நாட் பரிசிவை உணர்ந்திலேன் யான் மாலயன் தனக்கும் ஏனை வானவர் தமக்கும் யார்க்கும் மூல காரணமாய் நின்ற மூர்த்திஇம் மூர்த்தியன்றோ. (4-13-433) (58), சூரன் பேரிருள் வடிவம் கொண்டு வருதலைக் கண்டு தேவர் முருகவேளிடம் ஓலமிடுதல் (27) நண்ணினர்க் கினியாய் ஒலம் ஞான நாயகனே ஒலம் பண்ணவர்க் கிறையே ஒலம் பரஞ்சுடர் முதலே ஒலம் எண்ணுதற் கரியாய்ஒலம் யாவையும் படைத்தாய் ஒலம் கண்ணுதற் பெருமான் நல்கும் கடவுளே ஒலம் ஒலம் (59) (28) தேவர்கள் தேவே ஒலம் சிறந்த சிற் பரனே ஒலம் மேவலர்க் கிடியே ஒலம் வேற்படை விமலா ஒலம் பாவலர்க் கெளியாய் ஒலம் பன்னிரு புயத்தாய் ஒலம் மூவரு மாகி நின்ற மூர்த்தியே ஒலம் ஒலம். (60) (6-13-460,461) குர சம்மாரம் ஆனதும் தேவர்கள் முருகனைத் துதித்தது (29) கார்தடிந்து துய்க்கும் கணைகடலின் நீர்வறப்பப் போர்தடிந்து செல்லும் புகர்வேல் தனைவிடுத்துச் ஆர்தடிந்தாய் அன்றே தொழுமடியேம் வல்வினையின் வேர்தடிந்தாய் மற்றெமக்கு வேறோர் குறையுண்டோ.