பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரம் 77 (கு உ) பயோதரம் = ஸ்தனம் 2களிற்றான் கிழத்தி = ஐராவதத்தையுடைய இந்திரன் மனைவி:சசி இந்திராணி3நூல் =தாலி, 4.வேல்வாங்கி =வேலைப் பிரயோகித்தமுருகவேள். "சசிதன் விளங்கிய மங்கல நூல் வாங்குகிலாள் வாழ்ந்தனள். வேல் வாங்கவே" திருவகுப்பு 14 சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா பரணக்ருபாகர (அலங்காரம் 21) இந்த்ராணி மங்கில்ய தந்து ரகூடிாபரண மயில் விருத்தம் 1. ஐராவதத்தை - வெண்கம்ப மால்கிரி" என்றார் திருப்புகழில் (1105). 78. உலகுக்கு உபதேசம் கூாகொண்ட வேலனைப் போற்றாம லேற்றங்கொண் டாடுவிர்காள் போர்கொண்ட கால னுமைக்கொண்டு போமன்று பூண்பனவுந் தார்கொண்ட மாதரு மாளிகையும் பணச் சாளிகையும் ஆர்கொண்டு போவ ரையோ கெடுவீர்தும் மறிவின்மையே. (பொ.உ) கூர்மை கொண்ட வேலாயுதனைப் போற்றாமல், (ஏற்றம் கொண்டு ஆடுவீர்காள்) - உங்கள் 'ಥ್ರೀ.: பாராட்டிப் பொழுது போக்குபவர்களே போருக்கு எழுந்து வரும் காலன் உங்கள் உயின்ர்க் கொண்டுபோகும்பொழுது.(பூண்பன்வும்) நீங்கள் அணியும் ஆபரணங்களையும், (தார் கொண்ட) பொன் ஹாரம் அணியும் மனைவிமார் முதலிய பெண்களையும், உங்கள் மாளிகைகளையும் பணப் பைகளையும் யார் எடுத்துக்கொண்டு போவார்கள்! எதையேனும் உங்களுடன் எடுத்துக்கொண்டு போகமுடியுமா? ஐயோ! வீண்ாகக் கெட்டுப் போகின்றீர்களே! உங்கள் பேதைமையை என்னென்று கூறுவது! (சு - உ) ப் போற்றாது வீண் பெருமை பேசிப் பொழுது போக்குகின்றீர்க்ளே! இறந்து போம்போது மாதரையும், மாளின்கய்ையும், பணப் பையையும், யார்தான் கூட எடுத்துக்கொண்டு போ யும் பேதைகாள்! இந்த உண்மை தெரியாது கெட்டுப்

  1. ர்களே! (கு உ) 59ஆவது பாடலையும் நோக்குக சாளிகை = பணப்பை ஏற்றம் உயர்ச்சி, புகழ்,துணிவு

"மளையாளும் மக்களும் வாழ்வுத் தனமும் தன் வாயின் மட்டே இனமான சுற்ற்ம் மயானம்ட்டே வழிக்கேது துணை' பட்டினத்தார் பொது-12 பாடல் 59ன் குறிப்பையும் பார்க்க "தண்டிகையும் சாவடியும் சாளிகையும் மாளிகையும், கண்டு களிக்கும் கருத்தொழிவ தெக்காலம்". எக்காலக்கண்ணி 22.பத்திரகிரியார்