பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை 79. பிரார்த்தனை பெண்ணாசை அற பந்தாடு மங்கையர் செங்கயற் பார்வையிற் பட்டுழலுஞ் 1சிந்தா குலந்தனைத் தீர்த்தருள் வாய்செய்ய வேல்முருகா கொந்தார் கடம்பு புடைசூழ் திருத்தணிக் குன்றினிற்குங் கந்தா இளங்குமரா அமர்ாவதி காவலனே (அந்)செய்யவேல். காவலனே! பந்தாடு தீர்த்தருள்வாய். (பொ உ) (செய்ய வேல் முருகா) சிவந்த வேல் ஏந்தும் முருகா! (கொந்தார் கடம்பு) பூங்கொத்துக்கள் நிறைந்த கடப்ப மரங்கள்.(புடை சூழ்) சுற்றுப் பக்கங்களில் உள்ள திருத்தணிகைமலையில் வீற்றிருக்கும் கந்தப்பெருமானே! இளங்குமரனே தேவர் ஊர் அமராவதியைக் காத்தருளும் அரசே பந்து விளையாடும் மாதர்களின் சிவந்த கயல்மீன் போன்ற கண் பார்வையிற் பட்டுத் திரியும் (சிந்தா குலந்தனை) மனக்கவலையைத் தீர்த்துஅருள்புரிதி (சு உ) தணிகேசா! பெண்ணாசையால் வரும் மனக் கவலை என்னைப் பீடியா வண்ணம் அருள்புரிதி. o (கு.உ)1"சிந்தாகுலமானவை தீர்த்தருள்வாய்"-அநுபூதி46, 80. பிரார்த்தனை யம பயம் நீங்க பDTகத்தை முட்டி வருநெடுங் கூற்றன்வந் தாலென்முன்னே 1.தோகைப் புரவியிற் றோன்றிநிற் பாய்சுத்த நித்தமுத்தித் த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந் தகனைத் 2த்ரியம்பகனைப் பாகத்தில் வைக்கும் பரமகல் யாணிதன் பாலகனே. (அந்)சுத்த-பாலகனே மாகத்தை-நிற்பாய். (பொ - உ) (சுத்த பரிசுத்தமான (நித்த முத்தி) அழிவிலாத வீட்டின்பத்தைத் (தியாகப் பொருப்பைத் தந்தருளும் (கருணை) மேருவைத் திரிபுரத்துக்கு யமனாய் நின்று அழித்தவரை, (த்ரி அம்பகனை) முக் கண்ணரைத் தனது (வலப்) பாகத்தே கொண்ட (பரம கல்யாணி) மேலான நித்ய் கல்யாணியான பார்வதி தேவியின் குமாரனே! (மாகத்தை) " அளவுக்கு (முட்டி) உயர்ந்து வருகின்ற (நெடும்) நீண்ட பெரிய (கூற்றன் வந்தால்) யமன் என்னைத் தொடர்ந்து வந்தால் (அப்போது நீ) (என் முன்னே) என் முன்பு தோகைப் புரவியில் - கலாபம் கொண்ட (குதிரையாம்) மயில்மீது (தோன்றி நிற்பாய்)எதிர்தோன்றி அருள் புரிவாயாக (சு-உ) பார்வதி பாலகனே யமன் என் முன்வந்தால் நீமயில்மீது வந்து அருள்புரி