பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/853

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

846 முருகவேள் திருமுறை (11:திருமுறை தறிவுக் கறிவாகி அவ்வறிவுக் கெட்டா நெறியிற் செறிந்தநிலை நீங்கிப் பிறியாக் 23 கருணை திருவுருவாய்க் காசினிக்கே தோன்றிக் குருபரனென் றோர்.திருப்பேர் கொண்டு - திருநோக்கால் 24 ஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம் - ஏழுமத்து வாக்கள் இருமூன்றும் - பாழாக 25 ஆணவ மான படலங் கிழித்தறிவிற் காணரிய மெஞ்ஞானக் கண்காட்டிப் பூணும் 26 அடிஞானத் தாற்பொருளும் ஆன்மாவுங் காட்டிக் கடியார் புவனமுற்றுங் காட்டி - முடியாது 27 தேக்குபர மானந்தத் தெள்ளமுத மாகிஎங்கும் நீக்கமற நின்ற நிலைகாட்டிப் போக்கும் 28 வரவும் நினைப்பும் மறப்பும் பகலும் இரவும் கடந்துலவா இன்பும் . மருவுவித்துக் 29 கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும் வன்மழுவும் மானுமுடன் மால்விடைமேல் - மின்னிடத்துப் 30 பூத்த பவளப் பொருப் பொன்று வெள்ளி வெற்பில் வாய்த்தனைய தெய்வ வடிவாகி - மூத்த 31 கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்துண்ணின் றொருமலத்தார்க் கின்பம் உதவிப் - பெருகியெழு 32 மூன்றவத்தை யுங்கழற்றி முத்தருட னே இருத்தி - ஆன்றபர முத்தி யடைவித்துத் தோன்றுவரும் 33 . யானெனதென் றற்ற இடமே திருவடியா மோண்பரா னந்த முடியாக - ஞானம் 34 திருவுருவா இச்சை செயலறிவு கண்ணா அருளதுவே செங்கை அலரா - இருநிலமே 35 சந்நிதியா நிற்குந் தனிச்சுடரே எவ்வுயிர்க்கும் பின்னமற நின்ற பெருமானே! - மின்னுருவம் 36 தோய்ந்தநவ ரத்தச் சுடர்மணியாற் செய்த பைம்பொன் வாய்ந்த கிரண மணிமுடியும் - தேய்ந்தபிறைத் 37 துண்டம் இரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய புண்டரம் பூத்ததுநற் பொட்டழகும் விண்ட 38 பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங் கருள் பொழியும் கண்மலர் ஈராறும் பருதி 39 பலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக் குலவு மகரக் குழையும் . நிலவுமிழும் 40