பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/857

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

850 முருகவேள் திருமுறை (11:திருமுறை தெள்ளு திரை கொழிக்கும் செந்துளரிற் போய்க்கருணை வெள்ளம் எனத்தவிசின் வீற்றிருந்து - வெள்ளைக் கயேந்திரனுக் கஞ்சல் அளித்துக் கடல்சூழ், மயேந்திரத்திற் புக்கிமையோர் வாழச் சயேந்திரனாம் சூரனைச்சோ தித்துவரு கென்றுதடந் தோள்விசய வீரனைத்து தாக விடுத்தோனே - காரவுணன் வானவரை விட்டு வணங்காமை யாற்கொடிய தானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் பானுப் பகைவன் முதலாய பாலருடன் சிங்க முகனைவென்று வாகை முடித்தோய் - சகமுடுத்த வாரி தனிற்புதிய மாவாய்க் கிடந்தநெடுஞ் சூருடலம் கீண்ட சுடர்வேலோய் போரவுணன் அங்கமிரு கூறாய் அடல்மயிலுஞ் சேவலுமாய்த் துங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும் அங்கவற்றுள் சிறுமர வைப்பொருத சித்ரமயில் வாகனமா ஏறி நடாத்தும் இளையோனே மாறிவரு சேவற் பகையைத் திறல்சேர் பதாகையென மேவத் தனித்துயர்த்த மேலோனே - மூவர் குறைமுடிந்து விண்ணங் குடியேற்றித் தேவர் சிறைவிடுத்தாட் கொண்டளித்த தேவே - மறைமுடிவாம் சைவக் கொழுந்தே தவக்கடலே வானுதவும் தெய்வக் களிற்றைமணஞ் செய்தோனே - பொய்விரவு காம முனிந்த கலைமுனிவன் கண்ணருளால் வாமமட மானின் வயிற்றுதித்துப் பூமருவு காணக் குறவர் களிகூரப் பூங்குயில்போல் ஏனற் புனங்காத் திணிதிருந்து - மேன்மைபெறத் தெள்ளித் தினைமாவும் தேனும் பரிந்தளித்த வள்ளிக் கொடியை மணந்தோனே - உள்ளமுவந் தாறு திருப்பதிகண் டாறெழுத்தும் அன்பினுடன் கூறுமவர் சிந்தைகுடி கொண்டோனே நாறுமலர்க் கந்திப் பொதும்பர்ரெழு காரலைக்குஞ் சீரலைவாய்ச் செந்திப் பதிபுரக்குஞ் செவ்வேளே - சந்ததமும் பல்கோடி சன்மப் பகையும் அவமிருத்தும் பல்கோடி விக்கினமும் பல்பிணியும் . பல்கோடி பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாசுமடற் பூதமும்தி நீரும் பொருபடையும் தீதகலா 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 . 112