பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/858

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. கந்தர் கலிவெண்பா 851 வெவ்விடமும் துட்ட மிருகமுத லாமெவையும் எவ்விடம் வந்தெம்மை எதிர்ந்தாலும் - அவ்விடத்திற் 113 பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்டோளும் அச்சம் அகற்றும் அயில்வேலும் - கச்சைத் 114 திருவரையும் சீறடியும் செங்கையும் ஈரா றருள்விழியும் மாமுகங்கள் ஆறும் - விளிகிரணம் 115 சிந்தப் புனைந்த திருமுடிகள் ஒராறும் எந்தத் திசையும் எதிர்தோன்ற வந்திடுக்கண் 116 எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந் துல்லாச மாக உளத்திருந்து - பல்விதமாம் - 117 ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்சர்ப் பேசுமியல் பல்காப் பியத்தொகையும் . ஒசை 118 எழுத்துமுத லாமைந் திலக்கணமும் தோய்ந்து பழுத்த தமிழ்ப்புலமை பாலித் - தொழுக்கமுடன் 119 இம்மைப் பிறப்பில் இருவா தனை அகற்றி மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் தம்மைவிடுத் 120 தாயும் பழைய அடியா ருடன்கூட்டித் தோயும் பரயோகந் துய்ப்பித்துச் சேய 121 கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண் டடியேற்கு முன்னின் றருள் 122 திருச்செந்துார்க் கந்தர் கலிவெண்பா முற்றிற்று. (பெரியோர்கள் எழுதிய உரை இருப்பதால் உரை எழுதப்படவில்லை.) கந்தர் கலிவெண்பா - கருத்துரை பரம்பொருளின் தன்மையை அடி 1 முதல் 10 வரையிற் கூறி, நமது பிறப்பையும் நாம் பல விேஃே பின்னர் நல்வழியில் நம்மை இறைவன் கூட்டி ன்வ்ப்பதையும் அடி 11 முதல் 21 வரையிற் சொல்லி, இறைவன் குருவாக வந்து ஆட்கொண்டு பேரின்ப நிலையைத் தருவதை அடி22 முதல் 36 விரை விவரித்து, ஆறுமுகப் பெரும்ானாய்த் தரிசனம் தந்து விளங்குவதை அடி 37 முதல் 58 வரை எடுத்துரைத்து, இறைவனது பெருமையையும் தசாங்கத்தையும் அடி 59 முதல் 74 வ்ரையும் விளங்க் வைத்து, அடி 75 முதல் 108 வ்ரையும் கந்தபுர்ாணத்தின் சுருக்கம்ாய் ஆறுமுகக் கடவுளின் தோற்ற