பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/861

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

854 முருகவேள் திருமுறை (11-திருமுறை றுன்னையே பாடிநின் றாடியிரு கண்ணில் நீர் ஒடரோ மஞ் சிலிர்ப்ப உள்ளங் கரைந்துருக அடியனேன் . ஆனந்த உல்லாசம் ஆவ தென்றோ முன்னைவினை தீர்த்தருளு மன்னனே புள்ளுரின் முக்கட் குருக்கள் குருவே! முத்தர்குரு வேயோக சித்தர் குருவே பால முத்துக் குமர குருவே (122) 2. அன்னைசொற் கொருசெவி, ஐயர்சொற் கொருசெவி, அம்மான் துதிக்கொரு செவி, ஆணைசொற் கொருசெவி, வீரர்சொற்கொருசெவி, அயன் துதிக் கொருசெவி, வினோர் மன்னர்சொற் கொருசெவி, வள்ளிசொற்கொருசெவி, வான்வணிதை சொற்கொரு செவி, மறைதுதிக் கொருசெவி, அடியர்சொற்கொருசெவி வல்லசுரர் சொற்கொரு செவி, பன்னிரண் டுங்கொடுத் தென்சொல் கேளாமற் பராமுகம தாயிருந்தால் பாவியேன் மெலிவுகுறை எவர்செவியி லேற்றிப் படுந்துயர் களைந்து கொள்வேன் முன்னமறை நாலும்வந் துன்னுபுள் ளுரனே! முக்கட் குருக்கள் குருவே! முத்தர் குருவே யோக சித்தர் குருவே! பால முத்துக் குமர குருவே. (123) 33. திருச்செந்துரர் அகவல் (சிற்றம்பலநாடிகள்) (பகுதி) - О : ஒமெனுந் தாரக ஒண்பொருள் சிவனுக் காமென மொழிந்தே அருட்குரு வானோன் பொற்புறு பொதிய வெற்புறு முனிக்கு நற்பொருள் விளக்கு ஞான தேசிகன்