பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/863

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

856 (1) முருகவேள் திருமுறை (11:திருமுறை குமரா நமஎன்று கூறினார் ஒர்கால் அமரா வதியாள்வ ரன்றி - யமராசன் கைபுகுதார் போரூரன் கால்புகுவார் தாயுதரப் பைபுகுதார் சேரார் பயம். மாலை 47 (126) நோயுற் றடராமல் நொந்துமணம் வாடாமல் பாயிற் கிடவாமல் பாவியேன் - காயத்தை ஒர்நொடிக்குள் நீக்கியெனை ஒண்போகு ரையாநின் சீரடிக்கிழ் வைப்பாய் தெரிந்து. (மாலை 92) 127. சமரபுரித் தேவோ தணிகைமலைத் தேனோ அமரும் பழநிமலைக் கான மணிவிளக்கோ 128. சீரலைவாய் முத்தோ திருப்பரங்குன் றத்தரசோ ஏரகத்தில் என்றும் இருந்த பெருவாழ்வோ 129. பழமுதிர் சோலைப் பரனோ குறிஞ்சிக் ழவனென நல்லோர் கிளக்கும் பெருமாளோ (தாலாட்டு23-25) (130) 35. இலஞ்சி முருகன் உலா (மேலகரம் - பண்டாரக் கவிராயர் (பகுதி) 1 -Σ Ο Σ முருகள் பெருமை திருமுருகாற் ப்படையைத் செப்பியநக் கீரன் வெருவு பயந் தவிர்த்த வீரன் - மருவாத சிங்கமுகன் ஆனைமுகன் தீயஒரு சூரபன்மன் அங்கவரை மாய்த்த அறுமுகவன் - துங்கமுறப் பாடுந் திருப்புகழைப் பன்னிரண்டு நற்புயமும் சூடுங் கருணைச் சுவாமி மிக வாடியஅப் புத்தே ளிருக்கும் புரந்தரற்கும் விண்ணுலகில் தத்தம் பதி நிலைமை தானளித்தோன் சித்தமகிழ்ந் திந்திரனார் தம்மகளை யேய்ந்துமணங் கொண்டருளிச் சுந்தரஞ்சேர் மான்மகளாம் தோகைக்காச் சந்திரனேர்