பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/871

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

864 (2) (3) முருகவேள் திருமுறை (11:திருமுறை திருமான் மருகன் திருமான் மருகன் வருமான் மகவான் மருகன் - பெருமான் உருவ னருவ னுபய னபயன் முருகன் முருகன் முருகன் - ஒருவனுமை சேயானான் தீயவர்க்குச் சேயானான் தன்னுருவம் சேயானான் தன்பெயரும் சேயானான்........ (87-101) தானவரை முன்னந் தடிந்தமுரு கோன்வந்தான் வானவரைக் காத்திடுஞ்சி மான்வந்தான் - தானதன்மஞ் செய்யா தவரிடத்திற் சேரா தவன்வந்தான் மையாரு நீலமலை யான்வந்தான் - நெய்யாரும் வேலா யுதன்வந்தான் வென்றிக் கொடிபடைத்த காலா யுதத்திருக்கை யான்வந்தான் - மாலாகி வந்தாரை வாழ்விக்கும் வள்ளற் குகன்வந்தான் மந்தா கினிக்கு மகன்வந்தான் - கொந்தாரும் செச்சைத் தொடைபுனைந்த செவ்வேள் இதோவந்தான் பச்சைமயி லேறும் பரன்வந்தான் - வச்சிரத்தின் கோமான் மகட்கிசைந்த கோமான்வந் தான்குறவர் பூமான் தனைப்புணர்பூ மான்வந்தான் - பூமேல்வாழ் வேதன் இருகாலில் விலங்கிட் டவன்வந்தான் ஆத மெறிசுந் தரன்வந்தான் - போதம் மருவுதணி கேசன் வந்தான் வந்தான்...... (190-199) பட்டி வள்ளி கைவளையல் ஏற்றியிரு காலில் வளைந்தேற்றி மைவளையும் நெஞ்ச மயலேற்றி - வெய்ய இருட்டுவிடி யாமுன் இனத்தவர்கா ணாமல் திருட்டுவியா பாரஞ்செய் செட்டி - வெருட்டிஒரு வேடுவனாய் ஒர் புலவன் வெண்பாவைக் கைக்கொண்டு கோடு திரியுங் குறச்செட்டி - பாடாநக் கீரனைப்பூ தத்தாற் கிரிக்குகையுட் கற்சிறைசெய் தோரரிய பாவை யுகந்தணைந்து கீரனுக்கு வீட்டுவழி காட்டியிடும் வேளாண்மை யாஞ்செட்டி ஆட்டிலுவந் தேறும்.அன்ன தானசெட்டி - ஈட்டுபுகழ் தேவேந் திரன்மகள்பாற் சிந்தைகுடி கொண்டசெட்டி நாவேந்தற் கேயின்பம் நல்குசெட்டி - பூவேந்திக் கண்டு பணிபவர்தம் காசுபறிக் குஞ்செட்டி பண்டறுவர் ஊட்டுதன பாலசெட்டி - தொண்டர் மதுரையிற்சொக் கப்பசெட்டி மைந்தன் இளஞ்செட்டி குதிரை மயிலாம் குமரசெட்டி சதிருடனே