பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/881

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

874 முருகவேள் திருமுறை (11:திருமுறை அன்றைக் கணக்கின்றும் வந்திருக் கின்றதினி அம்புலி ஆடவாவே. அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன் அம்புலி ஆடவாவே (157) (குமரகுருபர சுவாமிகள்) 8. சிற்றில் பருவம் (திருமலை முருகன் பிள்ளைத் தமிழ்) கந்தப் பதுமச் சரவணமுங் கந்த புரியும் கந்தவெற்பும் கழுநீர் உதிக்கும் திருத்தணியும் காஞ்சி புரத்தின் மாவடியும் சொந்தப் புரிஏ ரகத்துடனே சோலை மலையும் பரங்குன்றும் துங்கத் திருஆ வினன்குடியும் சோதித் திருவேங் கடமலையும் சந்தப் பொதியும் குற்றாலத் தலமும் இலஞ்சித் தமிழ்ப்பதியும் தழைக்குங் கதிர்கா மத்தடமும் சயிலந் தோறும் விளையாடிச் செந்திற் பதியும் புரந்தபிரான் சிறியேஞ் சிற்றில் சிதையேலே செல்லுத் தவழும் திருமலையிற் செல்வா சிற்றில் சிதையேலே. (158) (கவிராஜ பண்டாரத்தையா) (மயிலம் முருகன் பிள்ளைத் தமிழ்) ஊரார் பெருவி டின்ழக்குங்கா லுன்முன் ணவனைத் தொழுதிழைப்பர் உகந்து சிறுவி டியாமிழைப்பின் உனது சரணம் தொழுதிழைப்போம் தேரா யதுவும் ஒருகுறப்புன் சிறுமி மிச்சில் திணைமாநீ தின்ற தனையாம் இனியறியத் தெய்வ யானை தனக்குரைப்பேம்