பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/886

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. பிள்ளைத் தமிழ்கள் 879 பொழிகரும் புயலனைய இனிய அம் பிகைமுலைகள் பொழிபால் குடித்தகளிறே புதியசெங் கமலமலர் சரவனந் தணில்மருவி விளையாடி யிட்டஅரசே செழியசெந் தமிழ்குலவு திருவிரிஞ் சையின்முருக சிறுதேர் உருட்டியருளே. சிவசிதம் பரநடன மிடுதிகம் பரர்குமர. சிறுதேர் உருட்டியருளே. (167) (மார்க்கசகாய தேவர்) (திருமலை முருகன் பிள்ளைத் தமிழ்) மங்கல மடப்பிடி குறக்கொடி யிடத்தினும் வலத்தினும் இருந்து வாழ்க மாமயிலும் வாழ்கஅதன் மேலிலகு நூபுரம் வணைந்தசே வடியும் வாழ்க பொங்கொளி தயங்குதிரு ஆபரண முந்நூல் - புனைந்திடுபொன் மார்பும் வாழ்க போர்வேலும் ஈராறு செங்கையும் பன்னிரு புயங்கள் சுந் தரமும் வாழ்க தங்குகரு னைக்கண்கள் ஆறிரண் டுந்திருச் சண்முகத் தருளும் வாழ்க தாழ்குழைமுந் நான்கினொடு பவளவா யாறுடன் தடமகுடம் இனிது வாழ்க o திங்கள்மும் மாரிபொழி யச்சேவல் வாழ்கநீ சிறுதே ருருட்டியருளே சிவஞான முத்திதரு திருமா மலைக்கடவுள் சிறுதே ருருட்டியருளே. 168. (கவிராஜ பண்டாரத்தையா)