பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/888

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

881 Hol. திருத்தணிகேசன் துணை பன்னிரண்டாம் திருமுறை முருகவேளின் பன்னிரண்டாம் திருமுறை - சிவபிரானுக் குரிய 12ஆம் திருமுறையிற் போல முருகன் அடியார் சரித்திரங்களைக் கூறும். அது சேய்த்தொண்டர் புராணம்" என்னும் பெயருடன் வரகவி தேனுார் சொக்கலிங்கம் பிள்ளை அவர்கள் இயற்றினது. 2708 பாடல்களைக் கொண்டது: விரிவஞ்சி, அந்நூல் இப்போது அச்சிடப்படாமல், அந்த அந்த அடியார்களின் சுருக்க வரலாறு அந் நூலுக்கு ஆதார மாயிருந்த பழைய தமிழ் நூற் பாடல்களுடன் ப்போது உரைநடை உருவாக வெளிவருகின்றது. பதினோராம் திருமுறையிற் கூறியதுபோலப், பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன் இருந்த 41 அடியார்களைப்பற்றிய குறிப்பு மாத்திரம் இத் திருமுறையிற் காண்பதாகும். அவ்வடியார்களாவார்: 1. செந்தில்வாழ் அந்தணர் (3) குன்றம் பூதனார் 2. அகத்தியர் (4) கேசவனார் 3. முசுகுந்தர் (5) நல்லழிசியார் 4. நாகனார் (6) நப்பண்ணனார் 5. நக்கீரர் (7) நல்லச்சுதனார் 6. நல்லியக்கோடன் (8) கல்லாட நூலாசிரியர் 7. பரிபாடல் ஆசிரியர்கள் := (9) ஒளவையார் (1) கடுவன் இளளயினனார் (10) சேந்தனார் (2) ஆசிரியன் நல்லந்துவனார் (11) கச்சியப் சிவாசாரியா