பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/891

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகவேள் திருமுறை 112 திருமுறை 5. அரகரவேல் மயிலென்பார் எல்லார்க்கும் அடியேன் ஆலயநற் றிருத்தொண்டர் அனைவர்க்கும் அடியேன் முருகனையே பாடுவார் எல்லார்க்கும் அடியேன் முத்திநிலை பெறநாடி நித்தமுரு கையன் திருவருளைச் சிந்திப்பார் அனைவர்க்கும் அடியேன் திருத்தணியிற் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியேன் இருகதிரைப் புறங்கானும் அழகுசுடர் வண்ணத் தெம்மான், எந் திருத்தணிகை அம்மானுக் காளே. 6. காவடியில் தேன்பால்மற் றவைசுமந்து செலுத்திக் கந்தனையே போற்றுவார் அடியார்க்கும் அடியேன் பாவலர்மா மணிபழநித் தலசரிதம் பகர்ந்த பாலசுப் பிரமணியர் அடியார்க்கும் அடியேன் , நாவலர்தம் மாமணிசின் னப்பர்க்கும் சாமி நாதர்க்கும் நலமருவு சேய்த்தொண்டர் தங்குற் றேவல்புரி தொண்டரடித் தொண்டர்க்கும் அடியேன் எம்மான், எந் திருத்தணிகை அம்மானுக் காளே. 7 குகனேரி யப்பர்தம தடியார்க்கும் அடியேன் குறைவிலருள் ஞானவரோ தயர் தமக்கும் அடியேன் புகழ்சேரி ராமலிங்க நாயனார்க் கடியேன் புனிதகவி குஞ்சரத்தின் அடியார்க்கும் அடியேன் தகவருமாம் பழக்கவிஞர் அடியார்க்கும் அடியேன் தண்டபாணிப்பெரியார் அடியார்க்கும் அடியேன் இகமிறைஞ்சும் குமர தாசர்க்கும் அடியேன் எம்மான், எந் ருத்தணிகை அம்மானக் காளே. 8 வானார்ந்த சீர்கொள்தணி கேசர்பத நீழல் வலங்கொள்தணி காசலவேள் அடியார்க்கும்.அடியேன் தாணாய தனிக்குமரன் திருவருள்சார் சச்சி தானந்த நாயனார் அடியார்க்கும் அடியேன் தேனாருங் கடம்பணிவார் அடிநீ லடைந்த செல்லப்பன் காதலன் னாட்சி தணயன் தேனுrரான் சொக்கலிங்கண் அடிமைகேட் டுவப்பார் திருத்தணிகை அம்மானுக் கன்பரா வாரே. -: Ο :