பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/892

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. செந்தில்வாழ் அந்தணர் 885 fo. பன்னிரண்டாம் திருமுறை -: Ο:-- 1. செந்தில்வாழ் அந்தணர் "செந்தில்வாழ் அந்தணர்தம் அடியர்க்கும் அடியேன்” செந்தில் வாழ் அந்தணர் திரிசுதந்தரர் எனப் பேர் பெறுவர்; இவர்கள் கங்கைக் கரையில் தவம் செய்து, பூலோகம், சுவர்க்கலோகம், சத்தியலோகம் ஆகிய மூன்று உலகங்களிலும் சென்று வசிக்கு ம் சுதந்திரத்தைப் பிரமன், சிவன், திருமால் மூவரிட்த்தும் வரமாக ப் பெற்ற காரணத்தால் திரிகுதந்தரர்' எனப்பெய்ர் பெற்றனர் திரிசுதந்தரர் 78,000 பேர். இவர்கள் கீழ்க்கண்ட தலங்களில் கீழ்க்கண்டவாறு சென்று அமர்ந்தனர். 1. விருத்தாசலத்தில் 1,000 பேர் சிவபிரானைப் பூசித்திருந்தனர். 2. திருச்செந்தூரில் 2,000 பேர் முருகவேளைப் பூசித்திருந்தனர் 3. சிதம்பரத்தில் 3,000 பேர் நடராஜப்பெருமானைப் ஷ 4. கமலாசனபுரத்தில் 4,000 பேர் திருமாலைப் பூசித்திரு ந்தனர். 5. திருவண்ணாமலையில் 5,000 பேர் சிவபிரானைப் பூசித்திருந்தனர் 6. ஜகந்நாதத்தில் 6,000 பேர் திருமாலைப் பூசித்திருந்தனர். 7. திருவிழிமிழலையில் 7,000 பேர் சிவபிரானைப் பூசித்திருந்தனர். 8. மதுரையில் * 8,000 பேர் சிவபிரானைப் பூசித்திருந்தனர். 9. தண்டகவனத்தில் 9,000 பேர் ரீராமரைப் பூசித்திருந்தனர். 10. கோகுலத்தில் 10,000 பேர் திருமாலைப் பூசித்திருந்தனர். 11. வதிரிகாச்சிரமத்தில் 11,000 பேர் திருமாலைப் பூசித்திருந்தனர் 12. சுவாமி மலையில் 12,000 பேர் முருகவேளைப் பூசித்திருந்னர் ஆக 78,000 பேர். 'திருச்செந்தூர் - அந்தணர்கள் (முக்காணியர்) இரண்டாயிரம் ேபர் முருகவேளைப் பூசித்துச் சிறப்புற்றனர். இவர்களை அன்புடன் நினைப்பவரும்_திரிமூர்த்திகளைப் பூசித்த பேற்றினைப் பெறுவர் எனத் திருச்செந்தூர்ப் புராணம் கூறும: