பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/911

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

904 - முருகவேள் திருமுறை (12.திருமுறை பார்கொண்ட பாதியும் பறவைதா னாகஅப் பாதியும் சேல தாகப் - பார்கொண் டிழுக்கஅது நீர்கொண் டிழுக்கஇப் படிகண்ட ததிசயமென நீர்கொண்ட வாவிதனில் நிற்குமொரு பேழ்வாய் நெடும்பூத மதுகொண்டு போய் நீள்வரை எடுத்ததன் கீழ்வைக்கு மதுகண்டு நீதிநூல் மங்காமலே சீர்கொண்ட நக்கீர னைச்சிறை விடுத்தவா செங்கீரை யாடியருளே திரையெறியும் அலைவாய் உகந்தவடி வேலனே செங்கீரை யாடியருளே. - - (செந்துார்ப் பிள்ளைத்தமிழ் 13) 2. ஒராயி ரம்பேரை வருடத்தில் ஒருநாளில் உண்கின்ற கற்கிமு.கிதான் ஒன்றுகுறை யாகிவிடு மன்றுநக் கீரர்வர ஒடிப்பிடித் தவரையும் காராய குன்றத் தடைத்துரிய நியதிக் கடன்துறை முடிக்க அகலக் கருதிமுரு காறவ ருரைத்தருள நீலக் கலாபமயி லேறி யணுகிப் பேரான குன்றந் திறந்திவுளி முகியைப் பிளந்துநக் கீரர்தமையும் பெரியவேல் கொண்டுபுனல் கண்டுசுனை மூழ்கிப் பிரான்முகலி நதியின்மேவச் சிராய திருவருள் புரிந்தகர னுாராளி சிறுதேர் உருட்டியருளே செயசெயென அமரர்தொழ அசுரர்முடி சிதறுமுனி சிறுதேர் உருட்டியருளே. - (திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் 93).