பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/919

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

912 முருகவேள் திருமுறை (12-திருமுறை எனப் பாடித் துதித்துப் பரவசமாயினர். பிரானும் அஞ்சற்க! உன்னொடு விளையாடி வந்தேன். நான் கேட்கும் நான்கு வினாக்களுக்குத் தக்க விடைத்ளைக் கூறுவாயாக எனக் கூறிக் (1) கொடியது எது (2) இனியது எது (3) பெரியது எது (4) அரியது எது என் வினவினர். அத்ற்கு ஒளவையார் கூறின பாடல்கள் பின்வருமாறு: (1) கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய் கொடிது கொடிது வறுமை கொடிது அதனினுங் கொடிது இளமையில் வறுமை அதனினுங் கொடிதுஆற்றொணாக் கொடுநோய் அதனினுங் கொடிது அன்பிலாப் பெண்டிர் அதனினுங் கொடிது * இன்புற அவர்கையில் உண்பது தானே. (2) இனியது கேட்கில் தனிநெடு வேலோய் இனிது இனிது ஏகாந்தம் இனிது அதனினும் இனிது ஆதியைத் தொழுதல் அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தர் அதனினும் இனிது அறிவுள் ளோரைக் கனவினும் நனவினுங் காண்பது தானே. (3) பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்: பெரிது பெரிது புவனம் பெரிது புவனமோ நான்முகன் படைப்பு நான்முகன் கரியமால் உந்தி வந்தோன் கரிய மாலோ அலைகடற் றுயின்றோன் அலைகடல் குறுமுனி அங்கையில் அடக்கம் குறுமுனி யோகல சத்திற் பிறந்தோன் கலசமோ புவியிற் சிறுமண் புவியோ அரவினுக் கொருதலைப் பாரம் அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம் உமையோ இறைவர் பாகத் தொடுக்கம் இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம் தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே.