பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/922

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. கச்சியப்ப சிவாசாரியர் 915. ஆன சொற்றமிழ் வல்ல அறிஞர்முன் யானும் இக்க்தை கூறுதற் கெண்ணுதல்........" காதைக் கெவன்பெயர் என்றிடில். போற்று கந்த புராணம தென்பதே" விருத்தத் தொகைகளால்...தணிக்கதை சாற்றுகேன்" im. (கந்தபுராணம் - அவையடக்கச் செய்யுள்கள்) 2. உச்சித மாம்சிவ வேதியன் காளத்தி யோங்கு மைந்தன் == கச்சியப் பன்செய்த கந்த புராணக் கலைக் கடலின் - மெச்சிய கல்வி மதியும்வெண் தாமரை மேவு மின்னும் - இச்செவி நாவினுக் கின்பாம் அமுதும் எழுந்தனவே. -(அபியுக்தர் வாக்கு) 3. வேதமொடு வேதாங்கம் பயின்று வல்லோன் விரிந்தசிவா கமமுணர்ந்து மேன்மை பூண்டோன் போதநிறை சிவமறையோன் காஞ்சி வாழும் புனிதமிகு கச்சியப்ப குரவ னானோன் வாதமுறு புலவர்குழாம் மகிழ்ந்து போற்ற மதிமலிமா டம்புடைசூழ் குமர கோட்டத் தேதமறு சகாத்தமெழு நாற்றின் மேலா இலகுகந்த புராணமரங் கேற்றினானே. -(அபியுக்தர் வாக்கு)